சூர்யாவின் 'வாடிவாசல்' அப்டேட்

Published By: Ponmalar

27 Apr, 2023 | 12:40 PM
image

சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்ற புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரையுலகின் தனித்துவமான படைப்பாளியாக முத்திரை பெற்றிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'வாடிவாசல்'.

இந்த திரைப்படத்தில் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களான பிறகும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் 'வாடிவாசல்' படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு, சூர்யா - வெற்றிமாறன் இணையும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் திட்டமிட்டபடி தொடங்கும்.

அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடுவதற்கான திட்டம் இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளரின் இந்த தகவல், சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

இதனிடையே இயக்குநர் வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதும், நடிகர் சூர்யா, சிவா இயக்கத்தில் தயாராகி வரும் 'கங்குவா' எனும் படத்தின் படப்பிடிப்பில் பங்கு பற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்