மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இரு குழுக்களுக்கிடையே மோதல் ; ஒருவர் பலி

Published By: Vishnu

27 Apr, 2023 | 12:26 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இருக்குழுக்களுக்கு இடையே  ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 42 வயதுடைய ஹிரேவத்த, அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

உயிரிழந்த நபர் தனது நண்பர்கள் இருவருடன் ஹிரேவத்த கடற்கரையினை அண்மித்த பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில் அதே பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த மற்றுமொரு குழுவினருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது முரண்பாடு வலுப்பெற  மற்றைய குழுவில் இருந்த ஒருவரினால் குறித்த நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00