பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாக இருக்கலாம் - நளின் பண்டார தெரிவிப்பு

Published By: Digital Desk 3

27 Apr, 2023 | 11:36 AM
image

(எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்துவதற்கு சட்டம் அமைப்பதற்கு பதிலாக  அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலே சட்டம் அமைத்து வருகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையா என எண்ணத்தோன்றுகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம் தொழில் முயற்சியாளர்களை பாதுகாத்து பலப்படுத்துவதற்கு சட்டம் அமைப்பதற்கு பதிலாக அரசாங்கத்தின் இருப்பை பாதுகாத்து, அரசாங்கத்துக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை தடுப்பதற்கு தேவையான சட்டங்களையே தயாரித்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் போன்ற ஒழுங்குமுறைகளை பலப்படுத்திவருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையா என என்ன தோன்றுகிறது.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உரிய நேரத்தில் முறையான தீர்மானங்களை எடுக்க தவறியதாலே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் வங்குரோத்து அடைந்த நாட்டில் வங்குரோத்து பிரஜைகளாக நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியில் நாங்கள் நாட்டை பாதாளத்துக்கு கொண்டுசெல்ல பங்காளியாகியவர்கள் அல்ல. அரச ஊழியர்களுக்கு இந்தளவு பாரிய சுமையை சுமத்தியது ராஜபக்ஷ் அரசாங்கமாகும்.

மேலும், அரச சேவையை பலப்படுத்தாமல் அரச சேவை செயற்திறமையை பலப்படுத்தவேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.  அரச ஊழியர்களை அல்ல. மாறாக தொழில் முயற்சியாளர்களையே ஏற்படுத்தவேண்டும். ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்தால் தொழில் வாய்ப்புக்கள் உருவாகின்றன. ஆனால் இன்று தொழில் முயற்சியாளர்கள் இல்லாத நிலைக்கு நாட்டை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00