வாழ்வை மாற்றும் லக்னாதிபதி

Published By: Nanthini

26 Apr, 2023 | 09:43 PM
image

திர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கும். எந்தெந்த வகையில் எதிர்காலத்தை சாதகமாக்கிக்கொள்ளலாம் என்ற தேடுதல் தொடங்கும்போது, அதில் ஜோதிடம் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்கிறது. இதில் ஜோதிடத்தில் வழிகளும் உள்ளன. ஒருவரது வாழ்வின் வளர்ச்சிக்கு அவருடைய லக்னாதிபதியை பலப்படுத்திக்கொள்வது பாரிய நன்மைகளை தருகிறது என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். இதனை அறிய லக்னத்தை பற்றிய சிறு விளக்கமும் நமக்கு தேவைப்படுகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் - இலக்கினம்  என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது ஆத்மா, குணநலன்கள், மனஉறுதி என ஒருவரை பற்றிய சுயத்தை வெளிப்படுத்தும் விடயமாகும். இது ஜாதக கட்டத்தில் 'ல' என குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது 'முதலாம் வீடு' என சொல்லப்பட்டிருக்கும். உதாரணமாக, ஒருவருடைய ஜாதகத்தில் மேஷ வீட்டில் 'ல' என குறிக்கப்பட்டு இருந்தால் அல்லது '1' வீடு என குறிக்கப்பட்டு இருந்தால், அவர் 'மேஷ லக்னம்' ஆகும். இதேவேளை சந்திரன் நின்ற இடம் ஒருவருடைய ராசியாக அமைகிறது.

ஒருவருடைய லக்னத்துக்கு யார் அதிபதியோ அவர் 'லக்னாதிபதி' என அழைக்கப்படுகிறார். அந்த வகையில், மேஷம் மற்றும் விருச்சிக லக்னங்களுக்கு செவ்வாயும், இடபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு சுக்கிரனும், மிதுனம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு புதனும், கடகத்துக்கு சந்திரனும், சிம்ம லக்னத்துக்கு சூரியனும், தனுசு மற்றும் மீன லக்னங்களுக்கு குருவும், மகரம் மற்றும் கும்ப லக்னங்களுக்கு சனி பகவானும் அதிபதிகளாகின்றனர்.

ஒருவருடைய லக்னாதிபதி அமைந்துள்ள விதத்தை பொறுத்தே அவரது குணம், கொள்கைகள், செயற்திறன், மன உறுதி, கீர்த்தி, அந்தஸ்து, கெளரவம், நன்மை தீமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் என்பன தீர்மானிக்கப்படுகின்றன. அதனை பொறுத்தே ஒருவரது வாழ்க்கை சிறப்பாகவோ அல்லது சுமாராகவோ செல்கிறது எனலாம். அவ்வளவு ஏன், லக்னாதிபதி பலம் இழந்த சந்தர்ப்பத்தில்  ராஜயோகங்களே இருந்தாலும், அவை நன்மை தராது என்பது ஜோதிடர்களின் கூற்றாகும்.

சரி, ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி எப்படி அமைந்தால் சிறப்பு என பார்க்கலாம். 

ஜாதகத்தில் லக்னாதிபதி லக்னத்திலேயே அமைவது முதல் தர சிறப்பாக கருதப்படுகிறது. உதாரணமாக, சிம்மம் லக்னமாகி அந்த வீட்டிலேயே சூரியன் இருப்பதாகும்.  அதற்கடுத்ததாக, 5, 9 ஆகிய பஞ்சம, பாக்கிய  ஸ்தானங்களில் அமைவது இரண்டாம் நிலை சிறப்பாகும். (இந்த இடங்களில் லக்னாதிபதி நீச்சம் அடையாத பட்சத்திலேயே சிறப்பு என கொள்ள வேண்டும்) 

அடுத்ததாக, கேந்திரம் எனும் 4, 7, 10 ஆகிய இடங்களில் இருப்பது மூன்றாம் தர சிறப்பாகும். லக்னாதிபதி தனது நண்பர்கள் வீடுகளில் அமைவது 4ஆம் நிலை நன்மையாகும். உதாரணமாக, லக்னாதிபதி குருவாக இருந்து அவர் தனது நண்பர்களான சூரியன், சந்திரன், செவ்வாய் போன்றோரின் வீடுகளில் இருப்பது  4ஆம் நிலை சிறப்பென சொல்லப்படுகிறது.

கடைசிக் கட்டமாக லக்னாதிபதி சமம் என்ற நிலையிலாவது இருந்துவிட வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அதை கடந்து லக்னாதிபதி பகை பெறுவது, கிரகணம் அடைவது, அஸ்தமனம் அடைவது, பல பாவிகளுடன் இணைவது (பாவிகள் எனும் போது சனி, ராகு, கேது, செவ்வாய் போன்றோருடன் இணைந்திருப்பது)  போன்றவை லக்னாதிபதியை வலுவிழக்க செய்யும் அல்லது மாறுபாடான பண்புகளை வெளிப்படுத்தும் என்பது அவர்களின் நிலைப்பாடாகும். அதாவது சுத்தமான பாலில் வேறு ஒரு பொருளை கலந்துவிடுவதன் மூலம் வருகின்ற மாற்றம் போன்றது எனலாம்.

இவ்வாறான நிலைகள் உங்கள் ஜாதகத்தில் இருப்பின், உங்கள் குடும்ப ஜோதிடரை அல்லது அனுபவமிக்க நல்ல ஜோதிடர்களை சந்தித்து லக்னாதிபதியை பலப்படுத்தும் வழிமுறைகளை கேட்டறிந்து, அவற்றை பின்பற்றி, வாழ்வில் வசந்தத்தை காணலாம். 

பொதுவாக எந்த தெய்வ வழிபாட்டை செய்யலாம், எவ்வாறான இரத்தின கல்லை அணிய வேண்டும், எந்த வகையான தான தர்மங்கள், சூட்சுமங்களை பின்பற்ற வேண்டும் போன்ற சாதகருக்கான மிகச் சிறந்த தீர்வுகள்  ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

தொகுப்பு: எஸ். ரொஷாந்தினி 

(ஜோதிட மூல நூல்கள்,ஜோதிடர்கள் மூலம் பெற்ற தகவல் அடிப்படையிலான தொகுப்பு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வத்தை வாரி வழங்கும் பைரவர் வழிபாடு..!?

2025-03-22 16:55:33
news-image

மீளா கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான நூதன...

2025-03-21 15:58:28
news-image

உங்களது வங்கிக் கணக்கில் தன வரவு...

2025-03-20 15:32:20
news-image

வெற்றிகளை குவிக்கும் வெற்றிலை ரகசியம்!

2025-03-19 15:46:41
news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35