எம்மில் பலரும் தங்களது ஜாதக கட்டம், திசா புத்தி, நன்றாக இருந்தும், கோச்சாரத்தில் சாதகமான அம்சம் இருந்தும் அவர்களால் நினைத்த காரியத்தை செய்ய இயலாத சூழல் இருக்கும். அதையும் கடந்து நினைத்த காரியத்தை செய்தால் அதனால் நேர்நிலையான தாக்கங்களை விட எதிர்நிலையான பாதிப்புகள் தான் அதிகம் உண்டாகும். இதனால் நாம் வீணாக ஜோதிடத்தை தவறு என நினைப்போம். ஆனால் உங்களுக்கு கடுமையான பித்ரு தோஷம் அதாவது முன்னோர்களின் சாபம் இருக்கிறது என பொருள் கொள்ளவேண்டும். அவர்கள் உங்களது முயற்சிகளுக்கு ஆசி கிடைக்காததால், உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கவேண்டிய குலதெய்வம் பலன்களை வழங்க இயலாத நிலையில் இருக்கும். எனவே முன்னோர்களின் சாபத்தை அகற்றுவதற்கான பரிகாரத்தை முழுமையான அளவில் செய்யவேண்டும். அதன் பிறகு உங்களது முயற்சிகளில் இருந்து வந்த மாயத்தடை அகன்று நல்லபலன்கள் கிடைக்கத் தொடங்கும்.
எம்முடைய முன்னோர்கள் உயிரோடு இருக்கும் போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து. அதற்குள் அவர்கள் அமரராகி விட்டால்.. அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை வருடா வருடம் தவறாமல் செய்ய வேண்டியது நமது தலையாய கடமையாகும்.
நமக்கு 365 நாட்கள் என்பது, நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும். அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்கள் இறந்த திதியில் ஒரு புரோகிதரை அழைத்து முறைப்படி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம் (உணவு) அளிக்க வேண்டும்.
அப்படி நாம் செய்யத் தவறிவிட்டால், நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல், நம் சந்ததியினருக்கும் ஏற்பட்டு விடுகிறது. நமக்கு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது சனி -ராகு இணைவு, சனி- சூரியன் -ராகு இணைவு முலம் இதனை நாம் உணரலாம். இதனை ஜோதிடர்களும் துல்லியமாக அவதானித்து சொல்வர்.
பித்ரு தோஷத்தை நீங்கச் செய்யும் பரிகாரங்கள்…
•அனுஷம், பூசம், புனர் பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாகிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால்... அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும்.
• மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும்.
•அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
மேற்கூறிய நாட்களில் சிராத்தம் செய்தாலோ அல்லது ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்ததாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்கியங்களும் வந்து சேரும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM