இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்தநிலையில் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். உயிரிழந்த இந்திய பிரஜை 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றுலாப் பயணி தனது மனைவியுடன் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் கடந்த 25 திகதி நுவரெலியாவிற்கு வந்து மாலை 6:30 மணியளவில் தங்கியிருந்த நுவரெலியா பிலக்பூல் விடுதியில் இருந்து பிரதான நகருக்கு இரவு உணவு உண்பதற்காக சென்று கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
குறித்த இந்திய பிரஜை மாரடைப்பின் காரணமாக வைத்தியசாலைக்குக் கொண்டு வருவதற்கு முன் மரணித்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM