இடி, மின்னலுடன் மழை : பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.!

Published By: Digital Desk 3

26 Apr, 2023 | 03:23 PM
image

இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மகாணங்களிலும் மன்னார்,அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை  மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

மன்னார், அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, பொலன்னறுவை, கம்பஹா,கோகலை,கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு  திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது...

2025-01-14 14:29:52
news-image

துப்பாக்கி முனையில் யுவதியை கடத்திச் சென்ற...

2025-01-14 14:21:51
news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58