திமுத், நிஷான் சதங்கள் குவித்து வரலாறு படைத்தனர்; இலங்கை சார்பாக டெஸ்ட் சதங்கள் குவித்த 3ஆவது ஆரம்ப ஜோடியினர்

Published By: Vishnu

26 Apr, 2023 | 12:37 PM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து குவித்த சாதனைமிகு 492 ஓட்டங்களுக்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, 3ஆம் நாள் பகல் போசன இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அணித் தலைவர் திமுத் கருணாரட்ன குவித்த 16ஆவது சதம் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ குவித்த கன்னிச் சதம் ஆகியன இலங்கை அணியை வலுவான நிலையை நோக்கி நகரவைத்துள்ளன.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சார்பாக ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரட்னவும் நிஷான் மதுஷ்க பெர்னாண்டோவும் நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடி சதங்களைக் குவித்தனர்.

எனினும் பகல் போசன இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது திமுத் கருணாரட்ன 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ 104 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

இலங்கை சார்பாக ஆரம்ப வீரர்கள் இருவரும் சதங்கள் குவித்த 4ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் மார்வன் அத்தபத்து சனத் ஜயசூரிய ஆரம்ப ஜோடியினர் இரண்டு தடவைகள் சதங்கள் குவித்ததுடன் திமுத் கருணாரட்ன, லஹிரு திரிமான்ன ஜோடியினர் ஒரு தடவை சதங்கள் குவித்திருந்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக அஸ்கிரிய மைதானத்தில் 2000ஆம் ஆண்டு மார்வன் அத்தபத்து (207 ஆ.இ.), சனத் ஜயசூரிய (188) ஆகிய இருவரும் சதங்கள் குவித்ததுடன் ஆரம்ப வீக்கெட்டில் 335 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

நான்கு வருடங்கள் கழித்து ஸிம்பாப்வேக்கு எதிராக ஹரர்ரேயில் இதே ஜோடியினர் இரண்டாவது தடவையாக சதங்களைக் குவித்ததுடன் 281 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தனர். அப் போட்டியில் அத்தபத்து 170 ஓட்டங்களையும் ஜயசூரிய 157 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷுக்கு எதிராக பல்லேகலையில் 2 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரட்ன (118), லஹிரு திரிமான்ன (140) ஆகிய இருவரும் ஆரம்ப வீரர்களாக சதங்கள் குவித்ததுடன் 209 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இலங்கை சார்பாக ஆரம்ப வீரர்கள் இருவரும் ஒரே டெஸ்டில் சதம் குவித்தவர்கள் பட்டியலில் இப்போது திமுத் கருணாரட்னவும் நிஷான் மதுஷ்க பெர்னாண்டோவும் இணைந்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப வீரர்கள் இருவர் சதங்கள் குவித்தது இது 82ஆவது சந்தர்ப்பமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி...

2023-09-30 07:12:48
news-image

கால்பந்தாட்டத்தில் புதிய யுகம் தோற்றுவிக்கப்படும் :...

2023-09-30 07:00:32
news-image

ஆசிய விளையாட்டு விழா 50 மீ....

2023-09-29 13:38:37
news-image

54ஆவது வருடாந்த செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப்...

2023-09-29 10:26:40
news-image

தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது...

2023-09-28 20:30:51
news-image

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது -...

2023-09-28 16:19:57
news-image

தனுஸ்க குறித்தநீதிமன்ற தீர்ப்பு - தசுன்...

2023-09-28 14:27:10
news-image

FFSL தேர்தலில் தக்ஷித்த தரப்பினர் வெற்றிபெறுவது...

2023-09-28 13:38:45
news-image

தனுஸ்க பாலியல் உறவின் போது ஆணுறையை...

2023-09-28 11:43:12
news-image

கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி; தொடர்...

2023-09-28 12:09:25
news-image

தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர்-...

2023-09-28 08:05:35
news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16