சாய்ந்தமருதில் மருந்தகங்களின் தரம் மற்றும் சேவை தொடர்பில் சுகாதாரத்துறை திடீர் சோதனை

Published By: Vishnu

26 Apr, 2023 | 12:19 PM
image

சாய்ந்தமருதிலுள்ள மருந்தகங்கள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், மருத்துவ நிலையங்களின் தரம் மற்றும் சேவை தொடர்பில் ஆராயும் திடீர் பரிசோதனை நடவடிக்கையொன்று இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய மருந்தகங்கள் கண்காணிப்பு வாரம் என ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தில் வியாபார உத்தரவு பத்திரமில்லாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டமை, மருந்தாளருக்கான தகமை சான்றிதழ் இல்லாமை, போதியளவில் மருந்துகளை தேக்கி வைக்க பொருத்தமான களஞ்சிய வசதியின்மை, பொருத்தமான வெப்பநிலை பேணப்படாமை, காலாவதியான மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டமை போன்ற பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க தேவையான விடயங்களை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு குறைபாடுகளை நிவர்த்திக்க கால அவகாசங்கள் வழங்கியுள்ளதாகவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் இந்த கள ஆய்வின்போது தெரிவித்தார்.

இந்த கள விஜயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர்களான எம்.என்.எம். பைலான், ஏ.எல்.எம். அஸ்லம் ஆகியோர் கலந்து கொண்டு மருந்தகங்கள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், மருத்துவ நிலையங்களின் தரம் மற்றும் சேவை தொடர்பில் ஆராந்தனர். குறித்த கால அவகாசத்தில் குறைகளை நிவர்த்திக்க தவறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53