புதிதாக நியமனம் பெற்ற வைத்திய உத்தியோகத்தர்களுக்கான அறிமுக நிகழ்வும் சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் வழங்கி வைப்பு நிகழ்வும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.
பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் ரிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதிப்பணிப்பாளர், பிரிவுத்தலைவர்கள் வைத்திய அத்தியட்சகர்கள் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்றியதுடன் தத்தமது பிரிவு தொடர்பான விபரங்களையும் பணிமனை மற்றும் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் கருத்திட்டங்கள் தொடர்பான விபரங்களையும் வழங்கினர்.
இதன்போது உரையாற்றிய பணிப்பாளர் அவர்கள் வைத்தியர்கள் வைத்தியசாலையில் பொதுமக்கள் முறைப்பாடு இன்றி எவ்வாறு சேவையை வழங்க வேண்டும் என்பது பற்றி வலியுறுத்தியதுடன் பிரிவு தலைவர்களும் தத்தமது பிரிவுகளினால் முன்னெடுக்கப்படுகின்ற சேவை தொடர்பான விபரங்களையும் தாம் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு உங்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் தமது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.
இந்நிகழ்வில் விசேடமாக வைத்திய அத்தியட்சகர்கள் பங்கு பற்றி தத்தமது வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தற்போது மருந்து தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு நோயாளர்களினை சமாளித்து சேவை வழங்கி வருகின்றோம் வருகின்றோம் என்பது தொடர்பிலும் கருத்துக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் இறுதியாக புதிதாக கடமையை பொறுப்பேற்றுள்ள வைத்திய உத்தியோகத்தர்களுக்கு தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM