மீன்பிடித் தொழிலுக்காகச் சென்று காணாமல் போன ஏனைய 4 மீனவர்களும் படகுடன் இன்று அதிகாலை மாலைதீவுக் கரையோரப் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

கடந்த டிசெம்பர் 24 ஆம் திகதி கல்முனையைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக ஒலுவில் துறைமுகத்திலிருந்து 2 இயந்திரப் படகுகளில்; கடலுக்குச் சென்றிருந்தனர். 

இதன்போது, 6 மீனவர்களும் காணாமல் போன நிலையில்,  இவர்களில் இருவர் படகு ஒன்றுடன் கடந்த 5ஆம் திகதி மாலைதீவுக் கடற்பரப்பில் அந்நாட்டுக் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். 

இதேவேளை, ஏற்கெனவே மீட்கப்பட்ட 2 மீனவர்களுடன் ஏனைய 4 மீனவர்களையும் சேர்த்து அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.