பூமியின் சந்திரனில், விண்கலம் ஒன்றை தரையிறக்கிய முதலாவது தனியார் நிறுவனம் எனும் சாதனையைப் படைப்பதற்கு ஜப்பானிய நிறுவனமொன்று மேற்கொண்ட முயற்சி இறுதிக் கட்டத்தில் தோல்வியில் முடிந்துள்ளது.
ஐஸ்பேஸ் (ispace) எனும் இந்நிறுவனம் அனுப்பிய விண்கலத்தை நேற்றிரவு சந்திரனில் தரையிறங்குவற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அவ்விண்கலம் சந்திரனின் தரையை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தபோது அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டவிட்டது.
அவ்விண்கலம் மென் தரையிறக்கத்துக்கு பதிலாக, சந்திரனின் தரையில் வேகமாக வீழ்ந்திருக்கலாம் என ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹகுதோ –ஆர் மிஷன் 1 (Hakuto-R Mission 1) என இத்திட்டத்துக்குப் பெயரிடப்பட்டிருந்தது.
இத்திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐஸ்பேஸ், எதிர்காலத்திலும் இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இம்முறை இந்த தரையிறக்கம் முழுமையடையும் என நாம் எதிர்பார்க்கவில்லை என ஐஸ்பேஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தகேஷி ஹக்கமதா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM