ஒவ்வொருவருக்கும் அவர்களின் தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் இயல்பாக சுரந்து, வியர்வை திரவத்தை கசியவைத்து வெளியேற்றுகின்றன. இத்தகைய செயல்பாட்டின் மூலம் உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக் கொள்ளப்படுகிறது. ஒருசிலரின் தோல் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் அமைவதற்கும் இதுவே காரணம். கோடை காலங்களில் அல்லது உடலின் உஷ்ணம்அதிகரிக்கும் நிலையில் வியர்வைச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வியர்வை காரணமாகவே உடல் இதமாகப் பாதுகாக்கப்படுகிறது. தோலிலிருந்து வியர்வை ஆவியாகி மறையும் போது உடலில் குளிர்ச்சியை உணர முடிகிறது. இது இயல்பான நாளாந்த நடவடிக்கை.
இந்நிலையில் ஒரு சிலருக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். இதற்கு உடல் வெப்பநிலை அதிகரிப்பும் ஓர் காரணம். எனினும், உடலின் சில பாகங்களில் குறிப்பாக அக்குள், அடிப்பாதங்கள், உள்ளங்கை மற்றும் நெற்றியில் வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள காரணத்தால் இங்கு அதிகமாக வியர்வை சுரக்கிறது. மத்திய நரம்புத் தொகுதியின் அதீதச் செயல்பாடு காரணமாக கை, கால் போன்ற பகுதிகளில் அதிகளவு வியர்வையை சுரக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே சமயத்தில் ஒவ்வாமை உள்ளிட்ட சில தூண்டல்களால் கூட உடலில் அதிவியர்வை ஏற்படலாம். வெப்பம், வலி, பயம், பதற்றம், உடல் உழைப்பு, குமட்டல், வாந்தி போன்ற காரணங்களால் வியர்வை அதிகரிக்கலாம். உழைப்பே இல்லாதவர்களைவிட உழைப்பவருக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவருக்கும் இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் 5 லீற்றர் அளவுக்கு வியர்வை வெளியேறுகிறது.
இந்நிலையில் பலருக்கு எதிர்பாராத தருணங்களிலும் அல்லது எப்போதும் அதிகளவு வியர்த்தல் காரணமாக உடலிலும் மனத்திலும் விவரிக்க இயலாத அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்று சதவீதமானவர்களுக்கு அதிவியர்வை (Hyperhidrosis) பிரச்னை உள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றன. இயல்பான வியர்வையோ, அதிக வியர்வையோ அது வெளியேறும் சமயத்தில் மணம் எதுவும் இருப்பதில்லை. ரத்தத்திலுள்ள வெளியேற்றப்பட வேண்டிய பொட்டாசியமும், உப்பும், நுண்கிருமிகளுடன் கூட்டணி ஏற்படுத்திய பின்னரே துர்நாற்றம் உண்டாகிறது. வியர்வையை குளிப்பதன் மூலம், கை கால்களை கழுவுவதன் மூலம் முறையாக அகற்றவேண்டும். இதற்காகவே இருக்கும் சில பிரத்யேக சிகிச்சைகள் மூலம் இதற்கு தீர்வு காணலாம். ஒரு சிலருக்கு மட்டும் என்னதான் இத்தகைய நிவாரணங்களை மேற்கொண்டாலும் கை, முழங்கை, முழங்கால், நெற்றி உள்ளிட்ட பல பகுதிகளில் வியர்வை வந்துகொண்டேயிருக்கும். அதிலும் அக்குள் பகுதிகளில் கட்டுப்படுத்த இயலாத துர்நாற்றத்துடன் கூடிய வியர்வை வந்துக்கொண்டேயிருந்தால் இவர்களுக்கு சிறிய அளவிலான சத்திர சிகிச்சையொன்றை மேற்கொண்டு அதனை குணப்படுத்தலாம் என்கிறார்கள் சரும நோய் நிபுணர்கள்.
டொக்டர் S அனூஜ் சிங்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM