வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் வீதியில் இன்று காலை 8 மணியளவில் இரு முச்சக்கர வண்டிகள்  மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மறவன்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த முற்சக்கரவண்டியை பின்புறமாக வந்த மற்றுமொரு முற்சக்கரவண்டி மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.  

இவ் விபத்து சம்பவம் தொடர்பான  விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.