டுவிட்டர் சமீபத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் ரஸ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளின் பிரச்சாரங்களிற்கு உதவுகின்றது

Published By: Rajeeban

25 Apr, 2023 | 04:19 PM
image

டுவிட்டர் சமீபத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் சீனா, ரஸ்யா, ஈரான் போன்ற ஏதேச்சதிகார (சர்வாதிகார) நாடுகளின் நடவடிக்கைகளிற்கு சாதகமாக அமைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் ஏதேச்சதிகார நாடுகள் தங்கள் டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி மேலும் பயனாளர்களை கவர்வதற்கும் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும்  பெருமளவானவர்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்புவதற்கும் உதவுகின்றன.

டுவிட்டர் தளம் முன்னர் போன்று அரசகட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊடகங்கள் பிரச்சார முகவர் அமைப்புகள் என அடையாளப்படுத்துவதில்லை.

மேலும் பயனாளர்கள் தங்கள் பதிவுகளை ஏனையவர்கள் மத்தியில் பகிர்வதற்கும் பரப்புரை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(no longer labeling state-controlled media and propaganda agencies, and will no longer prohibit their content from being automatically promoted or recommended to users)

இந்த இரண்டுமாற்றங்களும் டுவிட்டரை பயன்படுத்தி  உக்ரைன் போர் அமெரிக்க அரசியல் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்த  பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்பும் ரஸ்யாவின் திறனை அதிகரித்துள்ளது.

இரண்டு வாரங்களிற்கு முன்னர் ரஸ்ய ஊடகங்களை பார்வையிட்டவர்களை தற்போது அதிகளவானவர்கள் பார்வையிடுகின்றனர் (33 வீதம் அதிகம்) - டுவிட்டர் மேற்கொண்ட மாற்றங்களே இதற்கு காரணம்.

பிரச்சாரத்திற்காக சமூக ஊடகங்களை ஏதேச்சதிகார அரசாங்கங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கும் அரசசார்பற்ற அமைப்பொன்றின் ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26