(நா.தனுஜா)
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் மிகமோசமான தன்மை குறித்து இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், கடையடைப்புப்போராட்டம் உள்ளிட்ட தொடர்ச்சியான எதிர்ப்புக்கள் மூலம் அச்சட்டமூலத்தை வாபஸ் பெறச்செய்யமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொஷ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று 24 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதுமாத்திரமன்றி தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கூறுகள் மற்றும் அச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டியதன் அவசியம் என்பன பற்றியும் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல்போனோர் விவகாரம், தற்போது இடம்பெற்றுவரும் அதிகாரத்துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொஷுடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
அதேவேளை உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் கேசரியிடம் கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், கனேடிய உயர்ஸ்தானிகர் உள்ளடங்கலாக தாம் சந்திக்கும் அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் இச்சட்டமூலத்தின் பாதகதன்மை குறித்தும், வடக்கு - கிழக்கில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்துவருவதாகத் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி இன்று (25) வட, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் முழுமையான கடையடைப்புப்போராட்டம் போன்ற தொடர் எதிர்ப்புக்கள் மூலம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை நீக்கமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM