யாழ். புத்தூரில் மருத்துவருக்கு அச்சுறுத்தல் - பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

Published By: Vishnu

25 Apr, 2023 | 05:09 PM
image

வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்து , அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்ய தவறியமையை கண்டித்து , புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினர் தமது மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 10ஆம் திகதி புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் நடாத்தப்பட்ட தாக சாந்தி நிலையத்தில் சத்தமாக பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன. 

அதனால் தனது கடமைக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பாடலின் சத்தத்தை குறைக்குமாறும் தாக சாந்தி நிலையத்தில் நின்றவர்களிடம் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

அதனை அவர்கள் பொருட்படுத்தாது இருந்துள்ளனர். அதன் பின் குழு ஒன்று மருத்துவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. 

அதனை அடுத்து மருத்துவர் , தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாடு செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் கடந்த நிலையிலும் இதுவரை பொலிஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காதமையை கண்டித்தும், மருத்துவருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்யுமாறும் , சுகாதார பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கோரி தமது மருத்துவ சேவைகளை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21