பொருளாதார நெருக்கடி அதிகமிருக்கும் இந்த தருணத்தில் எம்மில் பலருக்கும் எங்கும் கடன், எதற்கும் கடன் என்ற சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பிட்ட சில மகா பாக்யவான்களை தவிர, மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது. இதில் சுப விரயமும் அசுப விரயமும் அடக்கம். நாம் கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்கான வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவ்விடயத்தில் ஜோதிட வல்லுநர்கள் ஒரு சில உபாயங்களை பரிகாரங்களாக பரிந்துரைக்கிறார்கள். இதனைப் பின்பற்றி உங்களை நீங்கள் கடன் சுமையிலிருந்து மீளலாம்.
மேஷ ராசி
• தயிரைக் கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளி கிழமையன்றும் ( ஒன்பது அல்லது இருபத்தியொன்று) மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்து வர கடன்கள் நீங்கி, வளம் பெறலாம்.
ரிஷப ராசி
• ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து (ஜவ்வரிசி பாயாசம்) அதை வெள்ளிக்கிழமையன்று பசுவிற்கு மாலை வேளையில் ( 5 -6) கொடுத்து வர கடன்கள் அடைத்து, சுகம் பெறலாம்.
மிதுன ராசி
• தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வர கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்திற்கு முன் இதனை செய்து வரவும்.
கடக ராசி
• ஒவ்வொரு ஞாயிறுகிழமையன்றும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். அருகில் நதியில்லையென்றால்... குளம் உள்ளிட்ட ஏதேனும் நீர்நிலைகளை பயன்படுத்தலாம். ஞாயிறு கிழமையன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வந்தாலும் கடன் சுமை தீரும்.
சிம்ம ராசி
• ஒவ்வொரு சனிக்கிழமையன்று காலை வேளையில் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு, எட்டு விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.
கன்னி ராசி
• சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ணக்கூடாது). மேலும் துளசி செடிக்கு தினசரி நீர் வார்த்து, ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க, கடன் சுமையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
துலாம் ராசி
• சனி மற்றும் ஞாயிறுக் கிழமையில் வரும் சதுர்த்தி, திதி, குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் ... கடன் சீக்கிரம் அடையும்.
விருச்சிக ராசி
• மரண யோகம் உள்ள நாட்களில் வாங்கிய கடனைத் திருப்பி கொடுப்பதற்கு ( சிறிதளவாவது) அந்த நாளைப் பயன்படுத்தலாம். அதன் பிறகு கடன் சுமை தீர்ந்து விடும்.
தனுசு ராசி
• வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்களை முடிந்த அளவு தானமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ வாங்கிக் கொடுக்க, கடன்களை அடைத்து நிம்மதி பெறலாம்.
மகர ராசி
• சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து, பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.
கும்ப ராசி
• வியாழன் கிழமையன்று மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து, மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து, முதலில் நீங்கள் சிறிதளவு அருந்தி விட்டு, பின்பு மற்றவர்களுக்கு தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடையும்.
மீன ராசி
• தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர, கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது ஒன்பது சப்பாத்திகள் கொடுப்பது நலம்.
மேற்கூறிய பரிகாரங்களை நம்பிக்கையுடன் பின்பற்றுபவர்களுக்கு கடன் சுமை குறைந்து, அவர்கள் சுபமான நிம்மதியான வாழ்வை அடைந்திருக்கிறார்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM