பெங்களூருவில் பயிற்சியகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டம் : இலங்கையின் மென்செஸ்டர் பயிற்சியகம் பங்கேற்பு

Published By: Digital Desk 5

25 Apr, 2023 | 05:56 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவின்  பெங்களூருவில்   ஏப்ரல் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்டப் பயிற்சியக அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கையின் மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தைச் சேர்ந்த 3 அணிகள் பங்குபற்றவுள்ளன.

கர்நாடக மாநில கால்பந்தாட்ட சங்கத்தின் வழிகாட்டலில் பெங்களூர் ஸ்கின்ஃபீல்ட் விளையாட்டுத்துறை பயிற்சியகம் ஏற்பாடு செய்துள்ள இந்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மொத்தமாக 12 கால்பந்தாட்ட பயிற்சியகங்கள் பங்குபற்றவுள்ளதாக மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவரும் தலைமைப் பயிற்றுநருமான ஒகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் 12 வயதுக்குட்பட்ட, 14 வயதுக்குட்பட்ட, 16 வயதுக்குட்பட்ட அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கடந்த சில வாரங்களாக பெத்தகான செயற்கை தள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர்.

இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த பெண்கள் அணிகளுடன் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட அணிகள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடியதாகவும் இந்த இரண்டு அணிகளும் திறமையாக விளையாடி சாதகமான பெறுபேறுகளை ஈட்டியதாகவும் ஒகஸ்டின் ஜோர்ஜ் குறிப்பிட்டார்.

எனவே, பெங்களூரில் நடைபெறவுள்ள கால்பந்தாட்டப் போட்டிகளில் தமது அணிகள் வெற்றிபெறும் என நம்புவதாக அவர் கூறினார்.

மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 12 வயதுக்குட்பட்ட அணி 6 போட்டிகளிலும் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட அணிகள் தலா 4 போட்டிகளிலும் விளையாடவுள்ளன.

அப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பயிற்றுநர்களும் புதன்கிழமை (26) இங்கிருந்து புறப்பட்டு பெங்களூரு  பயணமாகவுள்ளனர்.

ஸெய்ன் இலியாஸ் 12 வயதுக்குட்பட்ட அணிக்கும் தஸீன் அஹமத் 14 வயதுக்குட்பட்ட அணிக்கும் மொஹமத் ஷிமார் 16 வயதுக்குட்பட்ட அணிக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக அணிகள் 

12 வயதுக்குட்பட்ட அணி: ஸெய்ன் இலியாஸ் (தலைவர்), அகஸ்டின் மெஸ்ஸி (உதவித் தலைவர்), கனிந்து இமன்த, ஷாத் அஸார்தீன், எம். ஹூமைதுல்லா, முவாஸ் மிப்தா, அஷ்மான் ஹிஷாம், ஆதீப் அஹமத், எம். இமாத், சப்கான் சலீம், மொஹமத் சஹில், எம். அத்தீக், காலித் சிராஜுதீன், சாத் ஷியான், சந்தனு ரன்மிர, ஸெய்த் பவாஸ், தனிந்து துல்னிது, அஹ்மத் பாஸில், எம்.ஆர். முஹமத், எம். ஷமில், சாத் இலியாஸ்.

14 வயதுக்குட்பட்ட அணி: தஸீன் அஹ்மத் (தலைவர்), எம். ஆஷிப் (உதவித் தலைவர்), எம். அலி, மொஹமத் சஹ்லான், எம்.எச். அப்துல்லா, எம்.ஐ. உஸெய்பா, எம். யூசுப், முவாத் அஹ்மத், எம். ருஹாப், மாரிப் ஹனாபி, அப்துல் அஹாத், பாரிக் ராஜுதீன், அஸ்மத் ரூமி, உமர் நசீர், இஸட்.ஏ. காலித், கீத்தக்க, மொஹமத் ஹபில், தானிஷ் அஹ்மத், அஹமத் தன்வீர்.

16 வயதுக்குட்பட்ட அணி: மொஹமத் ஷிமார் (தலைவர்), அப்துல் பாசித் (உதவித் தலைவர்), அப்துல் ரஹீம், எம். ரிஷாத், எம். ஷமில், அப்துல் இமாத், எம். அம்மார், எம். நுஸ்கி, எம். பாஸ், அப்துல்லா பவாஸ், உமெய்ர் அஸ்தர், எம். ரஹில், அஹ்மத் முர்ஷெத், யூசுப் அஜ்ருள், அப்துல் அஹாத், எம். மிஸ்காத், அகஸ்டின் ஜெரமி, கவிஷ் குமார், அஹமத் அய்யான், எம். முஹன்னாத்.

அணிகளின் பயிற்றுநர்களாக ஒகஸ்டின் ஜோர்ஜ், அன்டன் வம்பேக், ராஜமணி தேவசகாயம், எஸ். அன்தனி, மொஹமத் அஸ்வர், மொஹமத் ஷியாம், எஸ். ஸ்ரீகாந்த் ஆகியோர் செயற்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிச்...

2024-06-22 19:31:12
news-image

விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஐ.சி.சி. இரட்டை வேடம்...

2024-06-22 16:33:52
news-image

கண்டி ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் ஆயிரத்துக்கும்...

2024-06-22 16:16:27
news-image

சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்;...

2024-06-22 11:11:48
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடிப்புச் செய்த இலங்கை...

2024-06-22 10:19:13
news-image

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் உதவித்...

2024-06-22 00:37:19
news-image

குவின்டன் டி கொக், டேவிட் மில்லரின்...

2024-06-22 00:06:34
news-image

இணை வரவேற்பு நாடுகள் மேற்கிந்தியத் தீவுகள்...

2024-06-21 21:45:08
news-image

அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியுடன்...

2024-06-21 14:03:31
news-image

கமின்ஸ் ஹெட்- ட்ரிக், வோர்னர் அரைச்...

2024-06-21 11:21:46
news-image

அவுஸ்திரேலியா - பங்களாதேஷ் அணிகள் மோதும்...

2024-06-21 00:57:21
news-image

சூரியகுமார், பும்ரா அபார ஆற்றல்கள்; ஆப்கனை...

2024-06-21 00:10:44