வெங்காய துவையல்

Published By: Ponmalar

25 Apr, 2023 | 01:32 PM
image

தேவையான பொருட்கள்: 

சின்ன வெங்காயம் - 200 கிராம்

காய்ந்த மிளகாய் – 3

உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்

புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

எண்ணெய் - 4 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

  • சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும். 
  • வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியா போட்டு வறுக்கவும் அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். 
  • பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். 
  • இப்போது ருசியான வெங்காய துவையல் ரெடி. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்