நெருக்கடியான வேளையில் அக்சார், பாண்டே, முக்கேஷ் அபாரம், ஹைதராபாத்தை வென்றது டெல்ஹி

Published By: Digital Desk 5

25 Apr, 2023 | 09:16 AM
image

(நெவில் அன்தனி)

மிகவும் நெருக்கடியான வேளையில் அக்சார் பட்டேல், மனிஷ் பாண்டே ஆகியோர் 6ஆவது விக்கெட்டில் ஏற்படுத்திய பெறுமதியான இணைப்பாட்டமும் முக்கேஷ் குமார் துல்லியமாக வீசிய கடைசி ஓவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு 8 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

அப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் வீரர் வொஷிங்டன் சுந்தர் அபரிமிதமாக சகலதுறைகளிலும் பிரகாசித்த போதிலும் அவரது ஆற்றல்கள் இறுதியில் வீண் போயின.

ஹைதராபாத் உப்பல், ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (24) இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சுமாரான மொத்த எண்ணிக்கைகளுக்கு மத்தியிலும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது.

மயான்க் அகர்வாலுடன் ஆரம்ப விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹெரி புறூக் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.

இரண்டாவது விக்கெட்டில் ராகுல் திரிபதியுடன் மேலும் 37 ஓட்டஙகளைப் பகிர்ந்த மயான்க் அகர்வால் 49 ஓட்டங்களுடன் வெளியேறினார். (69 - 2 விக்)

அதன் பின்னர் சீரான இடைவெளியில் ராகுல் திரிபதி (15), அபிஷேக் ஷர்மா (5), அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (3) ஆகிய மூவரும் ஆட்டம் இழந்தனர். (86 - 5 விக்.)

இந் நிலையில் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த வொஷிங்டன் சுந்தரும் ஹென்றிச் க்ளாசனும் 27 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

க்ளாசன் 19 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று 19ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார.

கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இம்ப்பெக்ட் வீரர் முக்கேஷ் குமார் கடைசி ஓவரை மிகத் துல்லியமாக வீசி 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து டெல்ஹி கெப்பிட்டல்ஸின் வெற்றியை உறுதிசெய்தார்.

வொஷிங்டன் சுந்தர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்ரிச் நோக்கியா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

வொஷிங்டன் சுந்தர் ஓரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தியபோதிலும் 6ஆவது விக்கெட்டில் மனிஷ் பாண்டேயும் அக்சார் பட்டேலும் ஜோடி சேர்ந்து டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை ஓரளவு கௌரவமான நிலையை அடைய உதவினர்.

பில் சோல்ட் (0) முதல் ஓவரிலேயே  புவ்ணேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததால் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

அடுத்த 3 ஓவர்களில் 33 ஓட்டங்கள் குவிக்கப்பட்டபோதிலும் நடராஜன் வீசிய 5ஆவது ஓவரில் மிச்செல் மார்ஷ் (25) களம் விட்டகன்றார்.

போட்டியின் 8ஆவது ஓவரில் வொஷிங்டன் சுந்தர் 2ஆம், 4ஆம், 6ஆம் பந்துகளில் முறையே அணித் தலைவர் டேவிட் வோர்னர் (21), சார்பராஸ் கான் (10), அமான் ஹக்கிம் கான் (4) ஆகியோரது விக்கெட்களைக் கைப்பற்றி டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் சரிவை ஏற்படுத்தினார். (62 - 5 விக்)

எனினும் மனிஷ் பாண்டேயும் அக்சார் பட்டேலும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் பெறுமதியான 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் தலா 34 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (134 - 7 விக்.)

பின்வரிசையில் எவரும் குறிப்பிடும் அளவுக்கு ஓட்டங்கள் பெறவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் புவ்ணேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50
news-image

எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும்...

2023-11-28 12:23:12
news-image

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின்...

2023-11-28 09:58:58
news-image

அரசியல்வாதியாக அவதாரமெடுக்கின்றார் ஷாகிப் அல் ஹசன்

2023-11-27 14:38:26
news-image

இளையோர் உலக குத்துச் சண்டையில் களமிறங்கும்...

2023-11-25 14:16:41
news-image

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர்

2023-11-25 12:16:36
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் “ஜேர்சிகள்”...

2023-11-25 12:04:52
news-image

ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை...

2023-11-24 17:48:33
news-image

தனுஸ்க விவகாரம் - அவுஸ்திரேலிய பொலிஸார்...

2023-11-24 12:20:51
news-image

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் விரர்...

2023-11-23 13:18:49
news-image

இரத்தம் சொட்டச்சொட்ட ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது...

2023-11-22 20:14:15
news-image

சுவிற்ஸர்லாந்தில் JKI கராத்தே சுற்றுப்போட்டி 2023...

2023-11-22 11:51:42