துறவறம் பூண்டு 45 நாட்களேயான எட்டுவயது பௌத்த துறவி ஒருவர் மந்திரத்தினை சரியாக உச்சரிக்கத் தவறியமையால் மூன்று துறவிகளால் தொடர்ந்து கடுமையான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ள எட்டுவயதாக துறவி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டை பாதை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துறவி பௌத்த பூஜையின் போது சொல்லி கொடுக்கும் மந்திரத்தினை சரியாக உச்சரிக்க தவறியுள்ளார்.
இதனால் சினமுற்ற மூன்று துறவிகளும் இணைந்து விகாராதிபதி இல்லாத சந்தர்ப்பங்களில் சிறுநீரை போத்தலில் கொண்டுவந்து அருந்தச் செய்தும், தேசிக்காயினை தரையில் பிழிந்து நாக்கினால் நக்குமாறும், தும்பு தடி முறியும் வரை தாக்கி கன்னத்தில் அறைந்தும், மான் கொம்பு மற்றும் கத்தரிகோலினால் உடம்பில் குத்தியும் சித்திர வதை செய்துள்ளனர்.
இதனால் பற்கள் உடைந்தும், உதடுகள் காதுகள் கிழிந்தும், உடலில் பல இடங்களிலும் குறித்து 8 வயதான பௌத்த துறவி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுபின்னர் மேலதிக சிகிச்சைக்காக 22 ஆம் திகதி பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக காயமுற்ற துறவியின் தந்தை மற்றும் பெரிய தந்தை ஆகியோர் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM