(நா.தனுஜா)
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடீக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொள்வதற்கு முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்திருக்கின்ற போதிலும், அத்தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது குறித்து இன்னமும் உறுதியான தீர்மானமொன்று எட்டப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் 26 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதுடன், இவ்விவாதம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தொடரவுள்ளது.
அதன்படி இத்தீர்மானம் மீதான விவாதத்திலும், அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து கேசரியிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இந்தத் தீர்மானம் மீதான விவாதத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கலந்துகொள்ளும் எனவும், இருப்பினும் வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து பாராளுமன்றக்குழுக்கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் தனது தனிப்பட்ட நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அவர், நாடு வங்குரோத்து நிலையை அடையவுள்ள பின்னணியில் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு கடந்த ஆண்டு தாம் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையை நினைவுகூர்ந்தார்.
எனவே சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டியதும், அதற்குத் தாம் ஆதரவளிக்கவேண்டியதும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் தமது கட்சி பங்கேற்கும் என்றும், இருப்பினும் வாக்கெடுப்பில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.
அடுத்ததாக இதுபற்றி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வினவியபோது, விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்துத் தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும், ஆனால் இவ்விடயம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்துத் தீர்மானமொன்றை மேற்கொள்ளுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM