சிவகார்த்திகேயனின் 'அயலான்' அப்டேட்

Published By: Ponmalar

24 Apr, 2023 | 01:06 PM
image

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'அயலான்' திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

'இன்று நேற்று நாளை' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'அயலான்'. இந்த திரைப்படத்தின் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர், சரத் கெல்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். வேற்று கிரகவாசி ஒருவருடன் ஃபேண்டஸி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே. ஜே. ஆர் ஸ்டுடியோஸ், 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் பேந்தம் பி எக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளால் இறுதி கட்ட தயாரிப்பு பணிகளின் கால அவகாசம் நீடித்துக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் இதற்காக பிரத்யேகப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08