நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று (24) திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நெடுந்தீவு மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் இன்று (24) திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு மாவிலி துறைமுகத்திலிருந்து, நெடுந்தீவு பிரதேசசெயலகம், நெடுந்தீவு காவல் நிலையம் வரை இடம்பெற்றது.
நெடுந்தீவு மாவிலிதுறைக்கு முன்பாக உள்ள வீட்டில் தங்கியிருந்த ஐவரை வெட்டிக் கொலை செய்து ஒருவரை காயமடைய செய்த சம்பவம் தொடர்பான குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பு எங்கே சென்று கொண்டு இருக்கிறது போன்ற பல கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியதுடன் சுலோகங்களையும் ஏந்தி இருந்தனர்.
இந்த ஊர்வலத்தில் நெடுந்தீவிலுள்ள சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில் பிரதேசசெயலாளர், நெடுந்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில், நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு காவல் நிலையத்தால் ஒவ்வொரு சமூகத்திடமும் காவல் நிலைய சட்டத்தின் ஊடாக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
நெடுந்தீவின் பொது இடங்கள் இறங்குதுறை மற்றும் மனித நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள், சுற்றுலா தளங்கள் அனைத்திற்கும் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படல் வேண்டும்.
நெடுந்தீவு காவல் நிலையத்தால் வரையறுக்கப்பட்ட நெடுந்தீவில் உள்ள இடங்களை ரோந்துப் பணியினூடாக கண்காணிப்பதற்கு இடைவிடாது ஒவ்வொரு நாளும் காவல் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நெடுந்தீவின் சுற்றுலா தலங்கள் ஒவ்வொரு நாளும் சென்று நெடுந்தீவு காவல் நிலைய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்.
வெளியூர்களில் இருந்து வந்து நெடுந்தீவின் விடுதிகளில் தங்குபவர்கள் விடுதி உரிமையாளர்களால் பூரண ஆள் அடையாளத்திற்கு உட்படுத்தல் நெடுந்தீவு காவல் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நெடுந்தீவுக்கு உள்ளே வரும் வெளியே செல்லும் மக்களின் தரவுகளை நவீன தொழிநுட்பத்துடன் கொண்டு பயணிகளை சிரமப்படுத்தாது அதிவிரைவாக தரவுகளை இறங்குதுறையில் வைத்து சேமித்து கொள்ளும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்று குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM