நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி குழுக்கூட்டம் : சஜித் தரப்பு இறுதி தீர்மானத்தை அறிவிக்கும்

Published By: Digital Desk 5

24 Apr, 2023 | 09:53 AM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் புதன்கிழமை (26) முதல் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவ்விவாதம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தொடரவுள்ளது.

இந்நிலையில் குறித்த விவாதம் மற்றும் வெள்ளியன்று இடம்பெறவுள்ள வாக்கெடுப்பு தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக திங்கட்கிழமை (24) மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன் போது நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவை எவ்வாறு பெற்றுக் கொள்வது , ஆளுந்தரப்பில் சகலரதும் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல் , வாக்கெடுப்பின் போது பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பில் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

அத்தோடு உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழ் மொழி மூலமான விடைத்தாள் திருத்தும் பணிகள் மாத்திரமே ஆரம்பமாகியுள்ளன. சிங்கம் மற்றும் ஆங்கில மொழி மூலமான விடைத்தாள் திருத்தும் பணிகளையும் துரிதமாக ஆரம்பித்து தாமதமின்றி பெருபேருகளைகளை வெளியிடுவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று மீண்டும் கூடி ஆராயவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது

இதே வேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இது தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்கும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கலந்துரையாடலின் போது தம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து வாக்கெடுப்பிற்கு முன்னர் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை முற்றாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி , இந்த தீர்மானத்திற்கு எதிராகவே தமது வாக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இது குறித்த தமது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்கவில்லை. எனினும் செவ்வாய்கிழமை (25) மாலை தமிழ் கட்சிகள் கூடி இது குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிரணியினர் எவ்வாறான தீர்மானங்களை எடுத்தாலும் தம்மால் பெரும்பான்மையுடன் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54