(நெவில் அன்தனி)
உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வெல்ல முடியும் என்ற உயரிய நம்பிக்கையுடன் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர்.
உஸ்பெகிஸ்தானின் டாஷ்கென்ட் விளையாட்டரங்கில் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் குறைந்தது 5 பதக்கங்கள் இலங்கைக்கு கிடைக்கும் என ஸ்ரீ லங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர்) நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
குவைத்தில் கடந்த வருடம் நடைபெற்ற 4ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் (2021க்கானது) பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலை வீராங்கனை நிர்மலி விக்ரமசிங்க (2:15.42 செக்.) உயரம் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற லெசந்து அர்தவிது (1.97 மீற்றர்) ஆகிய இருவரும் இம்முறையும் பதக்கங்களை வென்றெடுப்பார்கள் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குவைத்தில் கடந்த வருடம் வென்ற பதக்கங்களை விட கூடுதலான பதக்கங்களை இம்முறை இலங்கை வென்றெடுக்கும் என நம்புவதாக டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியைச் சேர்ந்தவரும் அணித் தலைவருமான லெசந்து அர்தவிது தெரிவித்தார்.
உஸ்பெகிஸ்தான் போட்டியை முன்னிட்டு கடந்த ஓரிரு மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் வீரர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோலூன்றிப் பாய்தலில் துஷேன் மலிந்தரட்ன சில்வா (நீர்கொழும்பு, மாரிஸ் ஸ்டெல்லா) பதக்கம் வெல்லக்கூடியவராக கருதப்படுகிறாhர்.
இந்த மூவரை விட நிலுபுல் பெஹசர தேனுஜ (உயரம் பாய்தல் - டிக்வெல்ல மத்திய மகா வித்தியாலயம்), ஜத்ய கிருல (400 மீற்றர்- காலி மஹிந்த கல்லூரி), அயோமல் அக்கலன்க (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம் - அம்பகமுவ மத்திய வித்தியாலயம்), துலாஞ்சனா ப்ரதீபனி விக்ரமசிங்க (1500 மீற்றர் - கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலை) ஆகியோரும் இலங்கைக்கு பதக்கங்களை வென்று கொடுக்க முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர் அணியின் பயிற்றுநராக நுவன் மதுஷன்கவும் வீராங்கனைகளுக்கு பொறுப்பாளராக சத்துரங்கி வீரக்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் விக்ரமபாகு தேசிய பாடசாயைச் சேர்ந்தவர்களாவர்.
ஸ்ரீ லங்கா அத்லெட்டிக்ஸ் உதவித் தலைவரும் மெலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர்நாயகமுமான சந்தன ஏக்கநாயக்க அணி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை குழுவினர் நாளை திங்கட்கிழமை (24) இங்கிருந்து உஸ்பெகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளனர்.
இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர்களுக்கான சீருடைகளை மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் பயணப் பைகளை பி. ஜீ. மார்ட்டின் இண்டஸ்ட்றீஸ் நிறுவனமும் வழங்கின.இது இவ்வாறிருக்க, உஸ்பெகிஸ்தானில் நான்கு தினங்கள் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை உட்பட 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். இதன் காரணமாக இலங்கை கனிஷ்ட வீர, வீராங்கனைகள் வெற்றிபெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கவேண்டிவரும்.
தோஹாவில் 2015இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள் கிடைத்தது.
தொடர்ந்து 2017இல் ஒரு வெள்ளி உட்பட 2 பதக்கங்களும், 2019இல் 2 வெள்ளி உட்பட 3 பதக்கங்களும் ஒரு வருடத்தால் பிற்போடப்பட்ட 2021க்கான போட்டியில் 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்களும் இலங்கைக்கு கிடைத்தது.பட விளக்கம்
ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தலைவர், ஏனைய அதிகாரிளுடன் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர்கள் எடுத்துக்கொண்ட படம். (படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM