உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அரசியல் செயற்பாடுகளில் பேராயரின் தலையீடு பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது - தயாசிறி 

Published By: Nanthini

23 Apr, 2023 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அரசியல் செயற்பாடுகளில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலையிடுவது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்படாமல் உண்மையை கண்டறிவதற்காகவே நாம் செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கைதுசெய்வதற்கான அரசியல் செயற்பாடுகளில் பேராயர் தலையிடுவது பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ என்போர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்கள் என கூறிய அவர், தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் அந்த பட்டியலில் இணைத்துள்ளார்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்படாமல் உண்மையை கண்டறிவதற்காகவே நாம் செயற்பட வேண்டும். அதனை விடுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ ஜனாதிபதிகளை தெரிவுசெய்ய முயற்சிப்பதோ பொருத்தமற்றது.

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தமது ஆட்சியில் தண்டனை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிக்கொண்டிருக்கின்றார். எதிர்பாராத விதமாக அவர் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு அவராலும் பிரதான சூத்திரதாரிகள் இனங்காணப்படாவிட்டால் பேராயர் அவருக்கு எதிராகவும் செயற்படுவார்.

இவற்றை தவிர்த்து பொலிஸார், இரகசிய பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை...

2024-02-26 19:42:03
news-image

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்...

2024-02-26 19:27:22
news-image

மட்டு நகர் பகுதில் புகையிரத்துடன் மோதி...

2024-02-26 18:55:36
news-image

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு...

2024-02-26 18:21:31
news-image

பொதுச் சுகாதார பரிசோதகர் ரொஷான் புஷ்பகுமார ...

2024-02-26 17:55:39
news-image

தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை அனுப்ப விடுக்கப்பட்ட...

2024-02-26 17:47:41
news-image

அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சபாநாயகர் மலினப்படுத்துகிறார்...

2024-02-26 17:32:15
news-image

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்...

2024-02-26 17:21:22
news-image

பிரதமரை சந்தித்தார் ருமேனிய தூதுவர்

2024-02-26 17:03:49
news-image

அம்பாறையில் பாடசாலை பஸ் ஆற்றில் வீழ்ந்தது...

2024-02-26 17:20:05
news-image

மேய்ச்சல் தரையை மீட்கும் பண்ணையாளர்களின் போராட்டம்...

2024-02-26 16:41:29
news-image

திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை !

2024-02-26 16:04:31