ரவிராஜ் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் போதிய சட்டத் தெளிவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட ஜீரிகள் சபை விசாரணைகளை முன்னெடுத்த வந்த நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இறுதி தீர்ப்பை வழங்கியது.

இந்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐவரும் குற்றவாளியல்ல என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.