மாத்தறை - மிதிகம கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இனங்காண பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார் 

Published By: Nanthini

23 Apr, 2023 | 11:46 AM
image

(எம்.மனோசித்ரா)

மாத்தறை - மிதிகம பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கு காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில்,  ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாத்தறை குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபர்கள் நால்வர் வந்த கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த காரில் வந்த நால்வரில் மூவரை கைதுசெய்வதற்கு பொலிஸ் தலைமையகம் பொது மக்களின் உதவியை கோரியுள்ளது. 

அதற்கமைய, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய 'மிதிகம சூட்டி' என்றழைக்கப்படும் ராஜபக்ஷ பத்திரணலாகே பிரபாத் மதுஷங்க, 30 வயதுடைய 'தடியா' என்றழைக்கப்படும் பஹலகே துஷார மதுஷங்க மற்றும் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய தித்தகல்ல கமகே சமிது சந்தீப நிலுபுல் ஆகிய மூவரை கைதுசெய்வதற்கே பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின் துணை பொலிஸ் அத்தியட்சகரின் 071 8592910 என்ற இலக்கத்துக்கு அல்லது மாத்தறை குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் 071 8596406 என்ற இலக்கத்துக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19