சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் நிறுவனத்திற்கு நிச்சயம் இவ்வாண்டு மிகப்பெரிய கௌரவத்துக்குரிய ஆண்டாக உள்ளது.

தேசிய வர்த்தக மேன்மை விருதுகள் விழாவில் வங்கியல்லாத நிதி சேவைகள் பிரிவுகளுக்கான தங்க விருது 2016 இல் வருடத்திற்கான சேவை வர்த்தகநாமம் மற்றும் வருடத்திற்கான சமூக பொறுப்புணர்வு நாமத்திற்காக இரு வெள்ளி விருதுகளை வென்றுள்ள CDB ஆனது இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (Ceylon Chamber of Commerce) மூலம் வருடாந்தம் நடத்தப்படும் சிறந்த கூட்டாண்மை பிரஜை 2016 விருதுகள் விழாவில் Green House Gas(GHG) உமிழ்வு பகுப்பாய்வுக்கான சிறந்த திட்டத்திற்கான விருதையும் மற்றும் 15 பில்லியன் ரூபாவுக்கு குறைவான வருவாய் பிரிவில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. கடந்தாண்டு தலைசிறந்த பத்து கூட்டாண்மை பிரஜை நிறுவனங்களுள் ஒன்றாக CDB காணப்பட்டது.

இந்த விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மதிப்பிற்குரிய.இந்த்ரஜித் குமாரசுவாமி, மக்கள், புவி, இலாபம் உள்ளடக்கிய 3Ps கொள்கையை பெருநிறுவனங்களின் அடிப்படைகளை மேம்படுத்த பயன்படுத்தும் இந்நிறுவனங்களின் முயற்சிகளை பாராட்டியதுடன் 3Ps மீதான பங்களிப்பு மனித இனத்தின் மீது மாற்றத்தை உருவாக்கும் என CDB திடமாக நம்புகிறது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான மதிப்பிற்குரிய முனைவர்.சமன் கெலாகம நடுவர் குழுவிற்கு தலைமை தாங்கியிருந்தார். பங்கு உரிமைதாரர் மேம்படுத்தல் சமூக பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை, நிர்வாகம் மற்றும் சூழல் சார் அக்கறையை உள்ளடக்கிய வர்த்தக மாதிரியை CDB தன்னகத்தே கொண்டுள்ளது.

“இந்த முயற்சியானது சூழல் மாசடைதலை குறைப்பதுடன் கரியமில தடத்தை குறைப்பதற்கான எமது அர்ப்பணிப்பையும் பாதுகாப்பதாக அமைந்துள்ளது. எமது வருடாந்த நிகழ்ச்சி நிரலுக்கேற்ப எமது செயற்பாடுகளின் உமிழ்வுகளை கணக்கிடல் மற்றும் கரியமில வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டடைதல் போன்றவற்றை எமது தலைமை அலுவலகத்தினுள் GHG உமிழ்வுகளை கணக்கிடல் இடம்பெற்று வருகிறது” என நிறுவனத்தின் அணியை தலைமை தாங்குபவரும் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார தெரிவித்தார்.

CDB இன் முதன்மை சூழல் திட்டமான மிஹிலக ஆதரென் ஊடாக அதன் குழு மத்தியில் மட்டுமன்றி, வாடிக்கையாளர்கள், வழங்குநர்கள் மற்றும் சமூகத்தின் மீதும் பொறுப்புணர்வை காட்டி வருகிறது.

‘வருடாந்தம் ஆக்கபூர்வமான அனுகூலங்களை காண்பதற்காக புதிய பசுமை நடைமுறைகளை நாம் அறிமுகம் செய்து வருவதுடன் எமது பங்கு உரிமைதாரர்கள் மத்தியில் சூழல் சார்ந்த விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வருகிறோம்’ என மஹேஷ் தெரிவித்தார்.

CDB இற்கு சொந்தமான அனைத்து வாகனங்கள் ஊழியர் போக்குவரத்து உத்தியோகபூர்வ வான் போக்குவரத்துரூபவ் கரியமில வெளியேற்றத்தை கண்காணித்தல் மற்றும் சக்தி பயன்பாடு போன்ற காரணிகளுக்காக, இலங்கை கரியமில நிதியத்தின் மூலம் ISO 14064-1 கரியமில சான்றளிக்கப்பட்டுள்ளது. 2015 இல் கரியமில தடம் 677 டன் CO2 மதிப்பீடுகளை பதிவு செய்துள்ளது. தெற்காசியாவில் இச்சான்றிதழ் பெற்றுள்ள முதலாவது நிதி நிறுவனமாக CDB திகழ்கிறது.

நீடித்த செயற்பாடுகள் மீதான CDB இன் தீர்மானம் எடுக்கும் கொள்கையானது தலைவர் மற்றும் நிர்வாக சபை பணிப்பாளர்கள் கொண்ட குழு மூலமாக தலைமை தாங்கப்பட்டு வருகிறது. எமது பரந்துபட்ட புள்ளிவிபரங்கள் எமது நிலையான நிகழ்ச்சி நிரலுடன் உறுதியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளதை CDB உறுதி செய்கிறது.

NBFI துறையில் பொதுமக்கள் நிதிகளுக்கான மதிப்புமிக்க பொறுப்பாளர் எனும் ரீதியில் எமது பங்கு உரிமைதாரர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை மாத்திரமே நாம் மேற்கொள்வோம். ‘நகர நிதி மற்றும் கிராமிய கடனளிப்பு’ எனும் கொள்கையின் கீழ் செயற்படும் எமது வர்த்தக மாதிரியானது எம்மை நிதிச்சேவைகள் துறையில் தலைமைத்துவத்தை அடையவும் கிராமிய பொருளாதாரத்திற்கான தேறிய கடன் வழங்குநராக இருப்பதனூடாக பிரமிட் சந்தைகள் தளத்தின் நீடித்த வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது” என நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

உயர் சாதனையீட்டிய இளம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமது கல்வியை தொடர்வதற்காக ‘‘ CDB சிசுதிரி புலமைப்பரிசில்’ திட்டம் மென்திறன் (soft skill) மற்றும் நிபுணத்துவ நிகழ்ச்சிகள் ஊடாக இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் மற்றும் கற்கை முயற்சிகள் நாடுமுழுவதும் உள்ள வசதி குறைந்த பாடசாலைகளில் முழுவசதிகள் கொண்ட IT ஆய்வுகூடங்களை நிர்மாணிக்க ‘CDB பரிகனக பியஸ’ திட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்கு ‘CDB திரிலிய திட்டம் மற்றும் ஊழியர் தொண்டர்களுக்கு ‘CDB ஹிதவத்கம் திட்டம் போன்ற சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன.