சோர்வை விரட்டும் எளிய முறையிலான சுப்பர் பிரைய்ன் யோகா

Published By: Ponmalar

21 Apr, 2023 | 05:28 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் ஒரே இடத்தில் அமர்ந்தபடியே தங்களது அலுவலகப் பணிகளை எட்டு மணி தியாலத்திற்கு மேலாக மேற்கொள்கிறார்கள்.

மேலும் மாற்றி அமைத்துக் கொண்டு வாழ்க்கை நடைமுறையின் காரணமாக உடற்பயிற்சி என்பது அரிதாகி விட்டது. இதன் காரணமாக காலையில் உறக்கம் களைந்து எழும்போது சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்வுடன் எழுகிறார்கள்.

இதற்கு சுப்பர் பிரைய்ன் யோகா எனும் பயிற்சியை மேற்கொண்டால் சோர்வை விரட்டி சுறுசுறுப்படையலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நாளாந்தம் இரவில் உறங்கி காலையில் எழும்போது சுறுசுறுப்பை உணர வேண்டும். புத்துணர்வை உணர வேண்டும். இதை தவிர்த்து காலையில் படுக்கையில் இருந்து எழும்போதே சோர்வை உணர்ந்தால், உங்களது உடல் மற்றும் மனம் முழுமையாக தயாராகவில்லை என பொருள் கொள்ளலாம்.

மேலும் ரத்த சோகை எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வுடன் எழுகிறார்கள். மேலும் வலி நிவாரணி மாத்திரைகளை நாளாந்தம் சாப்பிடுபவர்களுக்கும் சோர்வு இருக்கும். இதயத்தில் குருதியை பம்பிங் செய்யும் இயல்பு தன்மை குறைவாக இருந்தாலும் அவர்களும் சோர்வாகவே இருப்பார்கள்.

எம்முடைய உடலில் அமைந்திருக்கும் நாளமில்லா சுரப்பிகள் மற்றும் பாலியல் சுரப்பிகளின்  செயல்பாட்டில் ஏதேனும் தடைகள் இருந்தாலும் சோர்வுகள் இருக்கும். உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கும் சோர்வு ஏற்படக்கூடும்.

இதனை களைவதற்கு மருத்துவர்கள் சுப்பர் பிரைய்ன் யோகா எனப்படும் நமக்கு பரீட்சயமான தோப்புக்கரணம் என்னும் ஒரு பயிற்சியை அதற்கே உரிய முறையில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள். மேலும் சோர்வுடன் இருக்கும் பொழுது எம்முடைய மூளையில் இயங்கும் தன்மையுள்ள மின்னாற்றல் சுழற்சியில் தடைபடுவதால், அதனை தூண்டும் வகையிலான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய சோர்வுடன் இருப்பவர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள ஒவ்வொரு அரை மணி தியாலத்திற்கு ஒரு முறை அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். அதற்கான சாத்திய கூறு இல்லாத தருணங்களில், நின்ற இடங்களில் 21 முறை மெதுவாக குதிக்கலாம்.

வேறு சிலர் காலையில் எழுந்தவுடன் சுப்பர் பிரைய்ன் யோகா எனப்படும் தோப்புக்கரணம் போடும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மருத்துவரிடம் முறையான பயிற்சியை பெற்று அதனை கடைப்பிடிக்க வேண்டும்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right