உள்­ளக அலங்­கார நவீன அலங்­காரத் தெரி­வு­களை வழங்கும் Koala (பிரைவட்) லிமிட்டெட், அண்­மையில் நடை­பெற்ற தேசிய வர்த்­தகச் சிறப்­புகள் விரு­துகள் 2015 இல் நடுத்­தரப் பிரிவில், பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வியா­ப­ாரத்­து­றையில் வெள்ளி விருதை தன­தாக்­கி­யி­ருந்­தது.

வரு­டாந்த தேசிய வர்த்­தகச் சிறப்­புகள் விரு­துகள் 2015 இல் முதல் தட­வை­யாக இந்த பெரு­மைக்­கு­ரிய விருதை வென்­றி­ருந்­ததன் மூலம், சிறப்­பு­க­ளுக்­கான Koalaவின் ஒப்­பற்ற அர்ப்­ப­ணிப்­புகள் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இலங்கை தேசிய வர்த்­தக சம்­மே­ள­னத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த தேசிய வர்த்­தகச் சிறப்­புகள் விரு­துகள் என்­பதன் மூல­மாக, நாட்டில் வியா­பாரச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் நிறு­வ­னங்­களின் சிறப்­பான செயற்­பா­டு­களை கௌர­வித்து ஊக்­கு­விக்கும் வகையில் அமைந்­துள்­ளது.

தரம் மற்றும் நிபு­ணத்­துவம் கார­ண­மாக புகழ்­பெற்­றுள்ள இந்த விரு­துகள் வழங்கும் நிகழ்­வி­னூ­டாக, இந்­நாட்டின் பாரி­ய­ளவு வியா­பா­ரங்­க­ளி­லி­ருந்து நடுத்­தர அளவு மற்றும் சிறி­ய­ள­வி­லான வியா­பா­ரங்கள் என சகல பிரி­வு­க­ளுக்கும் பொருந்தும் வகையில் நிறு­வ­னங்கள் தெரிவு செய்­யப்­பட்டு கௌர­விக்­கப்­ப­டு­கின்­றன.

தேசிய வர்த்­தகச் சிறப்­புகள் விரு­து­களின் போது வெற்­றி­யா­ளர்­களை தெரிவு செய்­கின்­ற­மைக்­காக நடு­நி­லை­யான நடு­வர்கள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவர்கள் கடு­மை­யான தெரிவு செய்யும் விதி­மு­றை­க­ளுக்­க­மைய, சிறந்த தலை­மைத்­துவம், கூட்­டாண்மை மேலாண்மை செயற்­பா­டுகள், திறன் விருத்தி, வினைத்­திறன் நிர்­வாகம், உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச சந்தை சென்­ற­டைவு, கூட்­டாண்மை சமூக பொறுப்­பு­ணர்வு மற்றும் சூழல் நிலை­யாண்மை மற்­றும் வியாபார நிதிப் பெறு­பே­றுகள் ஆகி­ய­வற்றில் சிறப்­பு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்கி வெற்­றி­யா­ளர்­களை தெரிவு செய்­தி­ருந்­தனர்.

துறையில் ஏனைய விசேட நிறு­வ­னங்களை பின்­தள்ளி, தனது பிரிவில் முன்­னி­லையில் திகழ்­வ­தற்கு KOALA வுக்கு முடிந்­தது.சுமார் இரு தசாப்த்­தங்­க­ளுக்கு முன் ஸ்தாபிக்­கப்­பட்ட Koala, ஆரம்­பத்தில் சோஃபா உற்­பத்­தி­யா­ள­ராக தன்னை நிலை­நி­றுத்­தி­யி­ருந்­த­துடன், வெளி­நாட்டு ஏற்­று­ம­திகள் குறித்து அதி­க­ளவு கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. கடந்த ஆண்­டு­களில் கம்­பனி பெரு­ம­ளவு வளர்ச்­சியை பதிவு செய்­தி­ருந்­த­துடன், தற்­போது நவீன வாழ்க்கை முறை­க­ளுக்கு பொருத்­த­மான வகையில் தமது கொள்­கைகள், தயா­ரிப்­புகள் மற்றும் தீர்­வு­களை மேலும் விஸ்­த­ரித்­துள்­ளது.

இந்­நாட்டு மக்­களின் நவீன வாழ்க்­கை­மு­றைக்கு பொருத்­த­மான தேவை­க­ளுக்­கேற்ற வகையில் சேவை­களை வழங்க தமது சேவை வலை­ய­மைப்பை ஐந்து பிரி­வு­களில் முன்­னெ­டுக்க Koala நிறு­வனம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. Koala உள்­ளக தீர்­வுகள், குடி­யி­ருப்­பு­களின் உள்­ள­கங்­க­ளுக்­கான அலங்­காரம் மற்

றும் நிர்­மாண பிரிவு, மர, துருப்­பி­டிக்­காத ஸ் ரீல் மற்றும் மெலமைன் உற்­பத்தி பிரி­வுகள், விற்­பனை பிரிவின் கீழ் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய

நக­ரங்­களில் அமைந்த இரு பிரத்­தி­யேக காட்­சி­ய­றைகள், அலங்­கார மற்றும் சிவில் நிர்­மாண அலகு மற்றும் மேசை மேல் பிரிவு ஆகி­ய­வற்றின் மூல­மாக உயர் தரம் வாய்ந்த glas sware மற்றும் flatware போன்­றன மூன்று உலகப் புகழ்­பெற்ற வர்த்­தக நாமங்­க­ளி­லி­ருந்து வழங்­கப்­ப­டு­கின்­றன. KOALA தனது சொந்த வர்த்­தக நாமத்தின் கீழ­மைந்த சமை­ய­லறை தெரி­வு­க­ளான KOALA 18/10 Stainless காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஒரே கூரையின் கீழ் வீட்டுப் பொருட்கள் மற்றும் துருப்­பி­டிக்­காத உருக்­கி­ரும்பு தயா­ரிப்­புகள் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய இய­லு­மையை மேலும் விஸ்தரிப்பதற்கு, மர மற்றும் மெலமைன் தளபாடங்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தவும் Koala திட்டமிட்டுள்ளது.

உள்ளக அலங்காரத் துறையில் வெவ்வேறு பிரிவுகளில் தம்மிடம் காணப்படும் விசேடத்துவத்தை பெற்றுக் கொடுப்பதுடன் சிவில் நிர்மாண மற்றும் உள்ளக அலங்கார தீர்வுகள் துறைக்கு பொருத்தமான விசேட செயற்றிட்டங்கள் பலதுக்கு பங்களிப்பு வழங்குவதும் KOALA நிறுவனத்தின் நோக்கமாகும்.