(நெவில் அன்தனி)
தற்போது நடைபெற்றுவரும் 16ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தில் முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவிவந்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ், வியாழக்கிழமை (20) இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலாவது வெற்றியை சுவைத்தது.
பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய அப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 128 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்யை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் கடும் சவாலுக்கு மத்தியில் 4 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கட்டுப்பாட்டான பந்துவீச்சுகளும் அணித் தலைவர் டேவிட் வோர்னரின் நிதானமான துடுப்பாட்டமும் டெல்ஹி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.
இஷாந்த் ஷர்மா, அன்ரிச் நோக்கியா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி எதிரணியை குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு ஆட்டமிழக்கச் செய்தனர்.
2021க்குப் பின்னர் ஐபிஎல்லில் முதல் தடவையாக விளையாடிய இஷாந்த் ஷர்மா எதிரணியின் பிரதான வீரர்களான நிட்டிஷ் ராணா (அணித் தலைவர்), சுனில் நரேன் ஆகிய இருவரது விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பாக ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் (43), மத்திய வரிசை வீரர் அண்ட்றே ரசல் (38 ஆ.இ.) ஆகிய இருவரே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.
16ஆவது ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் 9ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 96 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், அண்ட்ரே ரசலின் அதிரடியின் உதவியுடன் மொத்த எண்ணிக்கை 127 ஓட்டங்களாக உயர்த்தப்பட்டது. கடைசி விக்கெட்டில் அண்ட்றே ரசலும் வருண் சக்கரவர்த்தியும் பகிர்ந்த 31 ஓட்டங்களே அணியின் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஷாந்த் ஷர்மா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்ரிச் நோக்கியா 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் கடும் சவாலுக்கு மத்தியில் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணித் தலைவர் டேவிட் வோர்னர் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 11 பவுண்டறிகளுடன் 57 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் குவித்த 4ஆவது அரைச் சதம் ஆகும்.
டேவிட் வோர்னருடன் ஆரம்ப விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்த ப்ரித்திவ் ஷா 13 ஓட்டங்களைப் பெற்றார். இந்தப் போட்டியில் இரண்டு அணிகளிலும் பதிவான அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.
அவர்களை விட மனிஷ் பாண்டே 21 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிட்டிஷ் ராணா 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அனுக்குல் ரோய் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM