மீண்டும் ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிட தயாராகின்றார் பைடன் - கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

Published By: Rajeeban

21 Apr, 2023 | 12:04 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபைடன் மீண்டும் போட்டியிடவேண்டுமா என்ற விடயத்தில்   ஜனநாயக கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் அவர் போட்டியிட்டால் தாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம் என ஜனநாயக கட்சியின்  பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அசோசியேட் பிரஸ் பொதுவிவகார ஆய்விற்கான நோர்க் நிலையம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 26 வீதமான அமெரிக்கர்கள் ஜோபைடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

ஜனவரியில் 22 வீதமானவர்கள் ஜோபைடன் மீண்டும் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டிருந்தனர்.

47 வீதமான ஜனநாயக கட்சியினர் ஜோபைடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

ஜனவரியில் இது 37 வீதமாக காணப்பட்டது.

மீண்டும் போட்டியிடுவது குறித்து ஜோபைடன் அடுத்தவாரம் அறிவிக்கவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியினர் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோபைடன் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து  ஜனநாயக கட்சியினர் மத்தியில் தயக்கம் காணப்படுகின்ற போதிலும் ஜனாதிபதியாக அவர் செயற்படும் விதத்தினை ஏற்று;கொள்வதாக 75 வீதமான ஜனநாயக கட்சியினர் தெரிவி;த்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஸ் தலைநகரில் உணவகமொன்றில் பெரும் தீ...

2024-03-01 07:01:31
news-image

மேற்குலக அச்சுறுத்தல்கள் அணு ஆயுதப் போர்...

2024-02-29 17:05:46
news-image

லெபானனிற்குள் தரைவழியாக நுழைவதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல்-...

2024-02-29 16:26:51
news-image

காஸா பலி எண்ணிக்கை 30,000 ஐ...

2024-02-29 15:43:19
news-image

வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய...

2024-02-29 12:15:05
news-image

உலகில் முதலாவதாக மெய்நிகர் சுற்றுலா முறையை ...

2024-02-29 17:39:21
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு...

2024-02-28 11:29:02
news-image

இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்னால் தீக்குளிக்க முயன்ற...

2024-02-27 16:32:41
news-image

திமுக – மநீம தொகுதி பங்கீடு...

2024-02-27 14:20:22
news-image

அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு சீனாவால் ஆபத்து -...

2024-02-27 12:39:19
news-image

உக்ரைனிற்கு மேற்குலக படைகள் - சாத்தியம்...

2024-02-27 09:55:58
news-image

பதவியை இராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

2024-02-26 14:57:44