இருபதுக்கு - 20 தொடரில் தென்னாபிரிக்க அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கெதிராக 3 இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை வீரர்களின் பெயர் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி துடுப்பாட்ட வீரரும் மித வேக பந்துவீச்சாளருமான புதுமுக வீரர் திக்ஷில டி சில்வா அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்  குசல் ஜனித் பெரேரா டி20 குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இலங்கை டி20 குழாமின் விபரம் இதோ...

1. அஞ்சலோ மெத்தியூஸ் (தலைவர்)
2. தினேஸ் சந்திமால் (உபத்தலைவர்)
3. குசால் மெண்டிஸ்
4. தனஞ்சய டி சில்வா
5. தனுஷ்க குணதிலக
6. நிரோஷன் டிக்வெல்ல
7. சீகுகே பிரசன்ன
8. சுரங்க லக்மால்
9. நுவான் பிரதீப்
10. இசுறு உதான
11. அசேல குணரத்ன
12. சச்சித்ர பத்திரண
13. லக்ஷான் சந்தகன்
14. திக்ஷில டி சில்வா
15. நுவான் குலசேகர