சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Published By: Vishnu

21 Apr, 2023 | 12:25 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள் வியட்நாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

303 இலங்கையர்களுடன் வியட்நாம் கொடியுடன் சென்ற மீன்பிடிப்படகொன்று கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் விபத்திற்குள்ளானது. இது குறித்து இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட குறித்த இலங்கையர்கள் , வியட்நாமில் அகதிகளாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 151 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர். எஞ்சிய 23 பேரும் கடந்த புதன்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 19 - 50 வயதுக்கு இடைப்பட்ட 6 பெண்களும் , 15 ஆண்களும், 18 வயதுக்கு குறைவான இருவரும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் , வவுனியா, கிளிசொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் குடிவரவு - குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36