ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாத தாக்குதல் - 5 வீரர்கள் உயிரிழப்பு

Published By: Rajeeban

21 Apr, 2023 | 11:26 AM
image

ஜம்மு/புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில், ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் படகில் தீ விபத்து :...

2026-08-12 16:00:45
news-image

ஏரியில் படகு கவிழ்ந்தது ; சிம்பாப்வே...

2026-08-12 14:58:50
news-image

காதலியை கரம் பிடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ...

2026-08-12 12:16:42
news-image

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது...

2026-08-12 12:07:22
news-image

போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு :...

2026-08-11 16:32:23
news-image

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை...

2026-08-11 11:55:01
news-image

ஐந்து இலட்சத்தை காலி செய்த கரையான்...

2026-08-11 10:53:34
news-image

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 132 பேர்...

2026-08-11 09:17:21
news-image

இந்தியாவில் மதுபோதையில் இளைஞர்கள் செலுத்திய கார்...

2026-08-10 17:07:08
news-image

புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ;...

2026-08-10 16:26:11
news-image

ஒரே படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக்...

2026-08-10 16:11:05
news-image

தாய்லாந்திலிருந்து இந்தியா சென்ற விமானம் நடுவானில்...

2026-08-10 15:31:27