புத்தரின் போதனைகளை பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது - இந்திய பிரதமர் மோடி

Published By: Nanthini

21 Apr, 2023 | 12:11 PM
image

(ஏ.என்.ஐ)

புத்தரின் போதனைகளை பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பெரிய அளவில் முன்னேறி வருகிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

புது டில்லியில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான உலக பௌத்த உச்சி மாநாட்டில்  கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புத்தரின் கோட்பாடுகள், நடைமுறை மற்றும் உணர்தல் ஆகிய வழிகளை இந்தியா பின்பற்றி வருகிறது. இந்த மூன்று புள்ளிகளிலும் இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உலக பௌத்த உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 

இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முன்னேறி வருகிறது. இந்தியா மட்டுமின்றி, முழு உலகத்தின் நலனுக்காகவும் இந்தியா பல விடயங்களை முன்னெடுத்து வருகிறது.

வெற்றி, தோல்விகள், மோதல்கள் மற்றும் போர்கள் ஆகியவற்றின் உணர்வை துறந்தால் மட்டுமே நாம் மகிழ்ச்சியை தழுவ முடியும். புத்த பெருமான் இவற்றை கடக்கும் வழியை கற்றுக் கொடுத்துள்ளார். உண்மையான மகிழ்ச்சி, அமைதியுடன் வாழ்வதில் உள்ளது. எனவே, உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், குறுகிய சிந்தனையை விட்டு வெளியேற வேண்டும்.

புத்தரின் பாதை எதிர்காலத்தின் பாதை; நிலைத்திருக்கும் பாதை. புத்தரின் போதனைகளை உலகம் பின்பற்றியிருந்தால், பருவநிலை மாற்றம் போன்ற நெருக்கடி கூட நம் முன் வந்திருக்காது. ஏனெனில், கடந்த நூற்றாண்டில், சில நாடுகள் மற்றவர்களை பற்றியோ, எதிர்கால தலைமுறையை பற்றியோ சிந்திக்கவில்லை.  

உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் அமைதிப் பணிகளாக இருந்தாலும் சரி, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற பேரிடர்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நெருக்கடியான காலத்திலும் இந்தியா தனது முழுத் திறனை வெளிப்படுத்தி மனித நேயத்துடன் உதவியுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு :...

2026-01-25 14:25:59
news-image

அமெரிக்காவில்  கடும் பனிப்புயல் ; மின்சாரம்...

2026-01-25 11:34:40
news-image

கனடா மீது 100% வரி விதிக்கப்படும்...

2026-01-25 11:15:15
news-image

சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதி...

2026-01-25 10:07:06
news-image

அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால்...

2026-01-24 13:54:37
news-image

அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் –...

2026-01-24 13:42:11
news-image

இந்தோனேசியாவில் கண்காணிப்பு விமானம் மலை மீது...

2026-01-24 12:00:03
news-image

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைத் தாக்குதல்:...

2026-01-24 11:36:52
news-image

இந்தோனேஷியாவில் மண்சரிவு : ஏழு பேர்...

2026-01-24 11:13:28
news-image

பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் :...

2026-01-23 13:31:08
news-image

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் பயணித்த கப்பல் விபத்து...

2026-01-23 12:26:05
news-image

டிக்டொக் தடையிலிருந்து தப்பியது : அமெரிக்க...

2026-01-23 09:44:53