கழிவறைகளில் அடைப்பு: 2 மணித்தியாலங்களின் பின் திரும்பி வந்த விமானம்

Published By: Sethu

20 Apr, 2023 | 04:10 PM
image

ஆஸ்திரியாவிலிருந்து அமெரிக்காவின் நியூ யோர்க் நோக்கி பறந்துகொண்டிருந்த விமானமொன்று கழிவறைகள் அடைபட்டதால் 2 மணித்தியாலங்களின் பின் மீண்டும் வியன்னாவுக்கு திருப்பப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓஸ்ட்ரியன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான இவ்விமானம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரிலிருந்து நியூ யோர்க் நகரை நோக்கி கடந்த திங்கட்கிழமை பறந்து கொண்டிருந்தது.  

பொதுவாக 8 மணித்தியாலங்கள் நீடிக்கும் பயணம் இது.

போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தில் சுமார் 300 பயணிகள் இருந்தனர். 

ஆனால், விமானத்தின் 8 கழிவறைகளில் 5 கழிவறைகள்  அடைப்புகள் காரணமாக பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருந்தன. இதனால், 2 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் விமானத்தை மீண்டும் வியன்னா நகருக்கு திருப்புவதற்கு விமான ஊழியர்கள் தீர்மானித்தனர்.

ஓஸ்ட்ரியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இது போன்ற சம்பவம் முன்னர் இடம்பெறவில்லை என அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 இவ்விமானத்தின் கோளாறுகள் சீராக்கப்பட்டு அது மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளது எனவும் அப்பேச்சாளர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்