(எம்.மனோசித்ரா)
நாட்டில் பாரிய கடற் பகுதிக்கும் ஏனைய சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளும் விவகாரத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பன நியமிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக 6 பில்லியன் டொலர் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ள கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.
எனினும் இவ்விடயத்தில் மூன்றாம் தரப்பினர் ஊடாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கக் கூடிய இந்த நஷ்ட ஈட்டுத் தொகையை சாதாரணமாக இழந்து விட முடியாது.
எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்விடயம் தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
அது மாத்திரமின்றி இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றையும் , பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் அமைக்குமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.
நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னும் 29 நாட்களே உள்ளன. எனவே இதற்கான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முதலில் எமது நாட்டில் ஆரம்பிக்க வேண்டும். அவை வெற்றியளிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை சிங்கப்பூர் செல்லலாம்.
அதனை விடுத்து ஆரம்பத்திலேயே சிங்கபூரை நாடுவது பொறுத்தமற்றது. எவ்வாறிருப்பினும் இவ்விடயத்தில் மோசடிகள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் இடமளித்து விடக் கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM