ஆபத்தான திருவையாறு சரவணாஸ் பாலத்தை முழுமையாக அகற்ற தீர்மானம்

Published By: Vishnu

20 Apr, 2023 | 04:02 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருவையாறு பகுதியில் ஆபத்தான நிலையில் காணப்படும் சரவணாஸ் பாலத்தினை முழுமையாக அகற்றவதற்கு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பாலத்தின் ஆபத்தான நிலைமை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஊடகங்களில் வெளிக்கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் 19 ஆம் திகதி புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில் சரவணாஸ் பாலத்தின் அனர்த்த நிலைமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு  தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இரணைமடு நீர்பாசன பிரதான கால்வாயின் மேலாக கட்டப்பட்டிருக்கும் சுமார் 40வருட பழமையான சரவணாஸ் பாலம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் காணப்படுவதால், குறித்த பாலத்தின் ஊடாக பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத ஆபத்தான நிலை காணப்படுவதுடன், சீரான நீர்ப்பாசன வழங்கலையும் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இவ்வாறான இடிபாடுகளுடன் காணப்படும் பாலத்தினால் ஏற்படப்போகும் பாரிய ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைவாக பாலத்தை முழுமையாக அகற்றுவதாக முடிவு எட்டப்பட்டுள்ளது. பாலத்தை அகற்றுவதற்கான முழு பொறுப்பினை நீர்ப்பாசன திணைக்களம் ஏற்றுக்கொண்டது.

மேலும் புதிய பாலத்தை விரைவாக அமைப்பதற்கான திட்டமொன்றினை விரைவாக தயாரித்து, அதனை நடைமுறைப்படுத்தி விரைவில் புதிய பாலத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில்  மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் அனர்த்த முகாமைத்துவ பிரிவு,பொலிஸ் அதிகாரி, கரைச்சி பிரதேச சபை செயலாளர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், கமநலச் சேவை அதிகாரிகள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38