திட்டமிட்டபடி வெளியாகுமா சிவகார்த்திகேயனின் 'மாவீரன்'...?

Published By: Ponmalar

20 Apr, 2023 | 12:21 PM
image

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்று... அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து போராடிவரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படமான 'மாவீரன்', அறிவித்தபடி ஜூன் மாதம் வெளியாகாது என்றும், ஜூலையில் வெளியாக கூடும் என்றும் திரையுலக வணிகர்களின் வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இதில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெறுவதாகவும், இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்றும் தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக படக்குழுவினர் பேசுகையில், ''படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதே திகதியில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் 'மாமன்னன்' எனும் திரைப்படம் வெளியாகிறது. இதனால் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் ஜூலையில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.'' என தெரிவித்தனர்.

'டாக்டர்', 'டான்' ஆகிய இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து உச்ச இடத்தை மீண்டும் பிடித்த சிவகார்த்திகேயன், 'பிரின்ஸ்' எனும் படத்தின் மூலம் மீண்டும் சறுக்கலைச் சந்தித்திருக்கிறார். 'மாவீரன்' படத்தின் வெற்றியின் மூலமே அவர் மீண்டும் உச்ச இடத்தை தொட்டு..தொடர முடியும். இதனால் 'மாவீரன்' படத்தை வெற்றிப்படமாக்க சிவகார்த்திகேயன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25
news-image

சிவ பக்தரின் புராண சரித்திரத்தை பேசும்...

2025-01-20 16:48:03
news-image

அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின்...

2025-01-20 16:26:33
news-image

நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் 'WILL'...

2025-01-18 16:13:54
news-image

நடிகை ரூபா நடிக்கும் 'எமகாதகி '...

2025-01-18 16:13:40
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ககன மார்கன்'...

2025-01-18 16:13:23