முகத்துக்கு கண்கள் அழகு சேர்க்கின்றன. கண்ணுக்கு அழகு புருவங்கள்தான்.
ஒன்றோடொன்று இணைந்த புருவம், அடர்த்தி குறைவான மெல்லிய புருவம், நீண்ட புருவம், குறுகலான புருவம் என பல வகைகள் உண்டு.
புருவத்தின் அடர்த்தி குறைவாக இருந்தால் முதலில் பிரவுன் நிறத்திலான பென்சிலைப் பயன்படுத்தி, மென்மையான புருவத்தை வரைய வேண்டும்.
அவ்வாறு செய்தால் புருவம் அடர்த்தியாக இருப்பதுபோல் தோன்றும். பின்பு கருப்பு நிறப் பென்சிலால் இயற்கை நிறம் கொடுத்து, ‘புரோ பிரஷ்’ பயன்படுத்தி, புருவத்தின் வடிவத்தைச் சரி செய்ய வேண்டும்.
அடர்த்தியான புருவமாக இருந்தால், புரோ பிரஷ்ஷில் சிறிதளவு ஹேர் ஸ்பிரே கலந்து புருவத்தைச் சீவி சரி செய்ய வேண்டும். கண்களுக்கு இடையில் அகலம் அதிகம் இல்லையென்றால் புருவங்களுக்கு இடையில் அதிக இடைவெளி இருக்கும்படி, பார்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களின் தொடக்கத்திலிருந்தே புருவத்தை வரைய வேண்டும்.
கண்களின் மத்திய பாகம் கடக்கும்போது, சிறிதளவு வளைந்து நீட்டி புருவம் ‘ஷேப்’ செய்தால் அழகாய் காட்சிளிக்கும். புருவங்களில் இருக்கும் ரோமத்தை நீக்க ஒருபோதும் ஹேர் ரிமூவரை பயன்படுத்தக் கூடாது.
புருவங்களில் அதிக ரோமம் இல்லாதவர்கள் அடிக்கடி புருவத்தில் விளக்கெண்ணையெ தேய்த்து வர ரோமங்கள் வளரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM