உக்ரேனிலிருந்து தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிக தடை விதிப்பதற்கு பல்கேரிய அரசாங்கம் இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களில் போலந்து. ஹங்கேரி, ஸ்லோவாக்கியா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தன.
உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்டப்டது.
இந்நிலையில் பல்கேரியாவும்இதில் இணைந்துகொண்டுள்ளது.
ஏப்ரல் 24 முதல் ஜூன் இறுதிவரை இத்தடை அமுல்படுத்தப்படும். ஆனால், பல்கேரியாவுக்கு ஊடாக ஏனைய நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு இத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என பல்கேரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான தீர்மானத்தை எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்ப்பதாகவும் பல்கேரியா தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM