இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டாம் - இந்தியாவிடம் கோரிக்கை

Published By: Vishnu

19 Apr, 2023 | 09:46 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான மையத்தின் தேசிய அமைப்பாளர் சூழளியலாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வனவிலங்கு மற்றும் தாவரவியல் சட்டத்தை மீறி அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு சீனாவுக்கு குரங்குகளை வழங்கும் விவகாரத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான கலாசார பிணைப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும்.

ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் வாழ்ந்த குரங்களிலிருந்து பிரிந்து வந்ததன் காரணமாக இலங்கையிலுள்ள குரங்குகள் உலகிலேயே பழமை மிக்க குரங்குகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இலங்கையின் பரிணாம வளர்ச்சியில் அழிந்து போன 3 குரங்கு இனங்கள் உள்ளன.

இலங்கையிலுள்ள குரங்குகளுக்கும் இந்தியாவிலுள்ள குரங்குகளுக்கும் மரபணு ரீதியிலான பிணைப்புக்களும் கலாசார பந்தங்களும் உள்ளன. 

அத்தோடு இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள் குரங்குகளை தெய்வமாக வணங்குகின்றனர். அதே போன்று இந்தியாவில் குரங்குகளுக்கான ஆலயங்களைக் கூட அவதானிக்கலாம்.

இவ்வாறு இந்தியாவிலும், இலங்கையிலும் தெய்வமாக வணங்கப்படும் குரங்குகளையே சீனாவுக்கு விற்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். 

வன விலங்குகள் மற்றும் தாவரவியல் சட்டத்திற்கு முரணாக அரசாங்கம் குரங்குகளை விற்க முயற்சிக்கின்றது. இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி செய்கின்ற அனைத்தும் இன்று வெளியாகிக்...

2024-09-18 11:24:57
news-image

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குகள் நிராகரிக்கப்படும்...

2024-09-18 11:11:06
news-image

அனைவரும் மறந்து விட்டாலும் தனியார் துறையை...

2024-09-18 11:08:20
news-image

ஊழலிற்கு உதவினார் என்பது உறுதியானால் ரணிலுக்கு...

2024-09-18 10:42:01
news-image

வவுனியாவில் தேர்தல் பதாதைகள், சுவரொட்டிகளை நீக்கும்...

2024-09-18 10:54:27
news-image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர்...

2024-09-18 10:31:57
news-image

சிறுவர்கள், பெண்களின் உரிமையை நாட்டின் அடிப்படை...

2024-09-18 10:21:26
news-image

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையில் காணப்பட்ட...

2024-09-18 10:40:21
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4,737...

2024-09-18 10:25:02
news-image

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகைப் பணத்தை...

2024-09-18 09:56:54
news-image

வாகன விபத்தில் மூன்றரை வயதுடைய குழந்தை...

2024-09-18 10:29:39
news-image

இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறும் தேர்தல்...

2024-09-18 09:31:58