தென்­னா­பி­ரிக்க அணிக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளை­யாடும் வாய்ப்பை இலங்கை அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க இழந்­துள்ளார். மலிங்க இன்னும் முழு உடல் தகுதி பெறா­மையே அவர் அணியில் இடம்­பெ­றா­த­தற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்­தோடு கடந்த மாதம் அவ­ருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்­பட்­ட­தால் சீரான பயிற்­சி­யிலும் அவர் ஈடு­ப­ட­வில்லை. அதன் கார­ண­மாகவே மலிங்­கவை அணியில் சேர்த்­துக்­கொள்­ள­வில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆனாலும் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் அவுஸ்­தி­ரே­லிய அணி­யுடன் நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் மலிங்க சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவார் என்றும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

எனினும் தென்­னா­பி­ரிக்க அணிக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 தொடரில் விளை­யா­டு­வ­தற்கு தான் தயா­ராக இருப்­ப­தாக மலிங்க தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து மலிங்க கருத்து வெளி­யி­டு­கையில்,

தொடர்ந்து ஒரு வருட காலம் விளை­யா­டாமல் இருந்து திடீ­ரென ஒருநாள் போட்­டியில் விளை­யா­டு­வது சற்று கடி­ன­மா­னது. அதனால் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ராக இரண்டு போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொட­ரிலும், அதற்குப் பிறகு நடை­பெ­ற­வுள்ள அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 தொட­ரிலும் விளை­யா­டி­விட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.