நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாது செய்­யாமல் இருப்­ப­தற்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் எந்த வித தீர்­மா­னங்­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. நாட்டை பிரித்­தாளும் சூழ்ச்­சிக்கும் பிரி­வி­னை­வா­தத்­துக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே பிர­தா­ன­மாக செயற்­பட்டு வரு­கின்றார். அவ்­வா­றான எவ்­வித நோக்­கங்­களும் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நிறை­வே­றாது என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்தார்.

கொழும்­பி­லுள்ள தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­லக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற ஊட­கவி­ய­லாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில், நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாது செய்­யாமல் இருப்­ப­தற்கு தீர்­மானம் எத­னையும் கட்சி மேற்­கொள்­ள­வில்லை. சிலர் இவ்­வா­றான கருத்­துக்­களை கூறலாம். 

ஆனால் அவை கட்­சியின் தீர்­மானம் அல்ல. நான் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பினர் என்ற வகையில் கூறு­கிறேன். கட்­சி­யினால் அப்­ப­டி­யொரு தீர்­மா­னத்­தையும் மேற்­கொள்­ள­வில்லை. ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்­ப­தாக கூறப்­பட்­டுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வரும் போது கூறிய வாக்­கு­று­தியும் அது­வாகும். எனவே மக்­களின் மத்­தியில் வெவ்வேறு கருத்­துக்­களை அர­சி­யல்­வா­திகள் பரப்பி வரு­கின்­றனர். ஆனால் அவற்றில் எவ்­வித உண்­மையும் இல்லை. கட்­சிக்­குள்ளும் நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறைமை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை.

நாம் தற்­போது நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் பல சவால்­க­ளுக்கு  முகம்­கொ­டுத்து வரு­கின்றோம். குறிப்­பாக முன்னாள் மஹிந்த ராஜ­ப­க் ஷ மற்றும் கூட்டு எதி­ர­ணி­யினர் என கூறிக்கொண்டு திரிபவர்களும் மக்களை இவ்வாறு குழப்பிக் கொண்டிருக்கின்றனர். நாட்டை குழப்புவதில் பிரதானமாக செயற்படுபவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­ப­க் ஷ என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் என்றார்.