(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த முடியாது என அனைத்து மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, எதிர்வரும் 25ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திறைசேரி நிதி ஒதுக்கிய பின்னர் அல்லது உயர் நீதிமன்றத்தினால் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முதலில் மார்ச் 9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தேர்தலை நடாத்துவதற்கு நிதி வழங்கப்படாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது முறையாக இம்மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நிதி நெருக்கடி காரணமாக காலவரையறையின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM