செல்வங்களை அள்ளித் தரும் 'அட்சய திருதியை' 

Published By: Nanthini

19 Apr, 2023 | 03:03 PM
image

ந்துக்கள் போற்றி வழிபடும் 'அட்சய திருதியை' தினம், இவ்வருடம் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை நாளான எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. 

சயம்' என்றால் 'தேய்தல்'... 'அட்சயம்' என்றால் 'தேயாமல் வளர்வது' என பொருள்படும். அத்தோடு, 'அட்சய' என்றால் 'குறையாதது' என்றும் சொல்லப்படும். அதனால்தான் 'அட்சய பாத்திரம்' அள்ள அள்ள குறையாதது என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது. 

இம்முறை சனீஸ்வர பகவானின் பரிபூரண நல்லாசியுடன் அட்சய திருதியை பிறக்கிறது.  

சனி பகவானைப் போல் அள்ளிக் கொடுப்பவர் யாரும் இல்லை என்று சொல்வர். அவரது ஆதிக்கம் நிறைந்த நாளில் அட்சய திருதியை நாளன்று வீடுகளில் தங்கம், வெள்ளி நகைகள் வாங்கி வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. 

நகைகளை வாங்காதவர்கள் மஞ்சள், குங்குமம், உப்பு போன்ற மங்கலகரமான பொருட்களையும் வாங்கி வீட்டில் வைக்கலாம். 

ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கலாம். அன்றைய நாளில் அன்னதானம், வஸ்திரதானம் அளிப்பது பெரும் புண்ணிய காரியமாகும். அத்தோடு, கால்நடைகளுக்கு ஆகாரம் வழங்கலாம்.  

பூமி வறண்டு காட்சியளித்தபோது பகீரதன் சிவனை பூஜித்து கடுந்தவம் செய்து, கங்கையை பூமிக்கு வரவழைத்த நாளே அட்சய தினம் என்றொரு கதையுண்டு.  

வனவாசத்தின்போது பலவித துன்பங்களை அனுபவித்த பாண்டவர்களுக்கு சூரிய பகவான் அக்ஷய பாத்திரம் வழங்கிய தினமும் இந்நாளே என்றும் சொல்லப்படுகிறது. 

கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலைக்கு மணிபல்லவ நாட்டில் இறைவனால் 'அமுத சுரபி' எனும் அட்சய பாத்திரம் கிடைத்ததுவும் இந்த நாளிலேயாகும் என்றும் கூறப்படுகிறது. 

ஐஷ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி தோன்றியதும், ஸ்ரீ மகாலட்சுமி திருமாலின் திருமார்பில் குடிகொண்டு அருளாசி வழங்கியதும், மகாலட்சுமியிடம் குபேரன் 'நிதிக்கலசம்' பெற்றதும், மகாவிஷ்ணு பரசுராமர் அவதாரம் எடுத்ததும், விநாயகருக்கு வேதவியாசர் மகாபாரதத்தை போதிக்க, அதை விநாயகர் தனது ஒற்றை தந்தத்தால் எழுதியதும், அண்ணபூரணியும் பிரம்மனும் பூவுலகில் அவதரித்ததும், திருப்பாற்கடலை கடைந்தபோது தேவாமிர்தம், லட்சுமி, வலம்புரி சங்கு, ஐராவதம், கற்பகத்தரு போன்ற சிறப்பு மிக்க செல்வங்கள் கிடைத்ததும் இந்த அட்சய தினத்திலாகும் என்பது ஐதீகம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்கள் என்பதால் நாம் தமிழ் இலக்கியங்களோடு...

2024-07-15 11:23:10
news-image

யாழ். வட்டுக்கோட்டை சிவபூமி தேவார மடம் ...

2024-07-15 11:57:52
news-image

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய எண்ணெய் காப்பு...

2024-07-09 17:54:00
news-image

தொலஸ்பாகை தாமரவல்லி ஸ்ரீ முருகன் ஆலய...

2024-07-08 18:08:11
news-image

இலங்கையில் இலக்கிய பாரம்பரியம் இன்னும் மாறவில்லை!...

2024-06-29 14:05:39
news-image

"நான் எழுத்தாளராக பிறக்கவில்லை; ஒரு மனுஷியாகத்தான்...

2024-06-19 17:59:32
news-image

உலகில் எங்கும் கேட்கக்கூடாத குரல்! :...

2024-06-19 13:34:15
news-image

21ஆம் நூற்றாண்டில் பல்லவர் கலையின் வரலாறு...

2024-06-11 15:50:21
news-image

பல்­லவர் கால கலை­யம்சங்­க­ளுடன் கும்­பா­பி­ஷேகம் காணும்...

2024-06-09 20:13:09
news-image

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மஹா...

2024-06-01 15:46:52
news-image

மட்டக்களப்பில் வைகாசி மாத கதிர்காம யாத்திரையும்...

2024-05-30 10:23:39
news-image

வைகாசி விசாகத்தின் மகிமை 

2024-05-22 14:20:23